Tuesday, January 17, 2012

அன்று அவமானம்! இன்று வெகுமானம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குன்றிப்போய் வெளியேறிய அந்தச் சிறுவன், இன்று குன்றென நிமிரும் இளைஞராய் சாதனை படைத்துள்ளார்.

ஒன்பது வயதில் மேல் நிலை பள்ளிப்படிப்பு, 10வயதில் B.Sc பட்டம், 12 வயதில் M.Sc பட்டம், 21 வயதில் குவான்டம் கம்ப்யுடேஷன் (QUANTUM COMPUTATION) துறையில் முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் துளசிதான் அந்த இளைஞர்… உலகின் முதல் ஏழு இளம் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் “தக்கத் அவ்தார் துளசி”யின் வெற்றிக்கு வெகுமானமாய் உலகின் பல மூலைகளில் இருந்தும் வேலைக்கான அழைப்புகள் குவிகின்றன. கண்ணை மறைக்கும் கவர்ச்சிகரமான உயர்ந்த சம்பளம், வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை என எதுவும் தேவையில்லை என்பது இந்த இலட்சிய இளைஞரின் முடிவு. குவான்டம் கம்ப்யுடேணன் துறையில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வருவதும் அதன் வளர்ச்சிக்காக ஒரு மாபெரும் ஆய்வுக் கூடம் எழுப்ப வேண்டும் என்பதுதான் துளசியின் தற்போதைய கனவாம்.

மூத்து முதிர்ந்த அனுபவசாலிகள் பலரும் தங்கள் வெற்றியின் அடித்தளமாய் விவரிப்பதென்னவோ அவமானங்களையும், மறுக்கப்பட்ட வாய்ப்புகளையும்தான். இவை இரண்மையுமே மூலதனமாக்கி துள்ளித் திரியும் இளம் வயதில் பாம்பே ஐஐடியின் துணைப் பேராசிரியராக முன்னேறியிருக்கிறார் துளசி. இந்தியாவில் இருபத்தி இரண்டு வயதில் முனைவர் பட்டம் பெற்று புகழ்பெற்ற பாம்பே ஐஐடியின் இயற்பியல் துறை துணைப் பேராசிரியராக உயர்ந்திருக்கும் துளசியிடம் இந்த சாதனை எப்படி சாத்தியப்பட்டது என்ற கேள்விக்கு…

அவமானங்களைப் புறம் தள்ளி விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, இலக்கில் மட்டுமே என் கவனத்தை குவித்திருந்தேன். அதுதான் இன்று பல வெற்றிகளை எனக்குக் குவித்திருக்கிறது. கற்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும்” என்று உற்சாகமாக கூறுகிறார் துளசி. எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் தாண்டி வெற்றி சிகரத்தை எட்டிப்பிடித்திருக்கும் சாதனை இளைஞர் பாராட்டப்பட வேண்டியவர்..

அறிய வேண்டிய ஆளுமைகள் !

மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டியபோது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!

கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர் குறித்த கருதுகோளை உடைத்தது கூட, ஆப்பிள் செய்த அரிய சாதனைதான். வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘ஆப்பிள்’ விழுந்த கதைகூட, வெல்ல நினைப்பவர்களும் சொல்லும் பாடம்தான்.

ஆப்பிள் என்கிற அதிசயக் கனவு மலர அடித்தளமாய் விழுந்த விதைகளும், பிறகு வளர்ந்த நிலைகளும், வளர்ந்த நிலையில் எழுந்த விரிசல் களும், ஒரு நாடகத்தின் சுவாரஸ்யத்தோடு நடந்தேறின.

சான்பிரான் ஸிகோவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சிலிகான் பள்ளத்தாக்கின் சிறிய நகரமொன்றில், தன் பட்டப்படிப்பை முடித்தபிறகு 1975-இல் என்ன செய்வதென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அட்டாரியில், வீடியோ கேம் புரோகிராமராகப் பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டரை ஒரு பயனுள்ள பொழுது போக்காகக் கருதிக் கொண்டிருந்த இளைஞர்கள் இணைந்து ‘ஹோம்ப் ரூ கம்ப்யூட்டர் கிளப்’ என்கிற பெயரில்


ஒரு கம்ப்யூட்டரை தானே உருவாக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஸ்டீவ் வோஸானியா என்கிற இளைஞரின் துணை மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்த வோஸானியா, கம்ப்யூட்டர் உருவாக்குவதில் கெட்டிக்காரராய் இருந்தார்.
ஒரு சங்கம் வைத்திருந்தார்க்ள். அதில் சங்கமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இரண்டு கைகளும் இணைந்தன. ஸ்டீவ் ஜாப் தன் வோஸ்க்ஸ் வேகன் காரை விற்றார். வோஸானியா என்கிற வோஸ், தனது கால்குலேட்டரை விற்றார்.

கலிபோர்னியாவில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார்ஷெட்டில் இவர்களின் கம்ப்யூட்டர் பயணம் ஆரம்பமானது. வோஸ் வடிவமைத்த ஐம்பது சர்க்யூட் போர்டுகளை விற்கத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றும் 500 டாலர்களுக்கு விலை போயிற்று.

பீட்டில்ஸ் இசைக் குழுவின் ரசிகராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், அவர்களின் ‘ஆப்பிள்’ இசைத் தொகுப்பின் நினைவாக, தன் நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைத்தார். 1976 ஏப்ரல் 6-இல் ‘ஆப்பிள்’ உதயமானது.

அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21. வோஸ் வயதோ 26, வணிகத்தில் நல்ல அனுபவமுள்ள மூன்றாவது பங்கு தாரரை உள்ளே கொண்டுவர முடிவு செய்தார்கள். அப்போது அறிமுகமானவர்தான் மைக் மார்க்குலா.

இன்டெல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக்கொண்டிருந்தார் மார்க்குலா. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன்மூலம் இலட்சக்கணக்கான டாலர்களுக்கு அதிபதியாகி விட்ட மார்க்குலாவிற்கு அப்போது வயது 33.

மார்க்குலா ஒரு நல்ல வணிகத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அமெரிக்க வங்கியிடம் கடனுதவி பெற்றுத் தந்ததோடு தானே 91,000 டாலர்களை முதலீடு செய்தார்.

வசீகரமான தோற்றத்தில் எளிய செயல் பாட்டு அம்சங்களுடன் வோஸ் வடிவமைத்த ஆப்பிள் ஐஐ பெரும் வெற்றி பெற்றது. 1980-க்குள் நான்கே ஆண்டுகளில் நிகரற்ற வளர்ச்சியைக் கண்டது ஆப்பிள்.

ஜாப்ஸின் கம்ப்யூட்டர் கனவுகளில் மேகின்டாஷ் முக்கியமானது. நவீன அம்சங்களும், விளையாட்டுத்தனமான வெளிப்பாடுகளும் கொண்ட மேக், கம்ப்யூட்டர் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தோடு உருவாகிக் கொண்டிருந்தது. மேக் உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் ஐஐ குழுவினரைத் தாழ்த்தும் விதமாக ஜாப்ஸ் செயல்பட்டு வந்தது பலரின் மனங்களையும் புண்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வசீகர காந்தமாய் விளங்கியவர். தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லாதபோதும்கூட எல்லோரையும் ஈர்க்கும சக்தி இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால், தன் அலுவலர்களை சரிவர நடத்தத் தெரியவில்லை அவருக்கு. ஓர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொல்வது பிடிக்காவிட்டல் மேசையின் மேல் தன் காலைத் தூக்கி வைத்து, அவர் முகத்துக்கு நேரே நீட்டுவார் ஜாப்ஸ்.

மேகின்டோஷ் உருவாகும் முன்னரே, ஆப்பிள் ஐஐ குழுவினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்தனர். மைக்ஸ் காட் என்பவரை நியமித்த மார்க்குலா இரண்டே ஆண்டுகளில் அவரைப் பணியை விட்டு நீக்கினார்.

பிறகு வந்தவர்தான் ஜான் ஸ்கல்லி, பெப்ஸி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக விளங்கியவர். ஜான் ஸ்கல்லி மீது ஜாப்ஸ் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஆப்பிள் வளர்ச்சியின் அசுர அத்தியாயங் களை உருவாக்கினார்கள்.

1984இல், மேகின்டோஷ் அறிமுகத்திற்காக அவர்கள் செய்த அதிரடி விளம்பரம் அமெரிக்காவை உலுக்கியது.

மேகின்டோஷ் எனப்படும் மேக், நவீன அம்சங்களை நிறையக் கொண்டிருந்தது. ஆனால் நவீன அம்சங்களே அதன் செயல்திறனுக்கு முட்டுக்கட்டை போட்டன.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாப்ஸ் அனாவசியத் தலையீடுகளை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. ஜாப்ஸின் அதிகாரங்களைப் பறிக்க ஸ்கல்லி முடிவு செய்தார். விரிசல் வலுத்தது.

1985இல் மே மாதம் 24ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் தன் இயக்குநர் குழு தன்னை ஆதரிக்க வில்லை என்று அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த கால கட்டத்தில்தான், கம்ப்யூட்டர் துறை, தன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆளுமையும் வசீகரமும் ததும்பி வழிந்த ஸ்டீவ் ஜாப்ஸ், எதிரி நிறுவனம் ஒன்றில் தலையெடுக்கத் தொடங்கியிருந்த ஒரு சாதுவான இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார்.

விடலைப் பருவத்தில், கனத்த கண்ணாடிகளுடன், நடுவீதியில் சிக்கிய மான் போல் கூச்சமும் விலகல் மனோபாவமும் கொண்டு, அதேநேரம் தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெயர் – பில்கேட்ஸ்!!

அவரை வெகு துச்சமாக மதித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்போது ஆப்பிளின் வருடாந்திர விற்று வரவு 1.5 பில்லியன் டாலர்கள். மைக்ரோ சாஃப்ட்டுக்கோ வெறும் 98 மில்லியன் டாலர்கள்தான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பிறகு ஜான் ஸ்கல்லி, நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். தளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை “மளமள”வென்று வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார் அவர். ஸ்கல்லி ஒரு தேர்ந்த நிர்வாகி. ஆனால் தொழில்நுட்பப் பின்புலம் கிடையாது.

அதேநேரம், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆளுமைமிக்க தலைவராய் வளர்ந்த பில்கேட்ஸ், ஒரு தொழில்நுட்ப நிபுணராகவும் தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.

மிக வேகமாக வளர்ந்து வந்த ஆப்பிளின் தலைவர், தொழில்நுட்பப் பின்புலம் இல்லாதவ ராய் இருந்தார். எனவே, தொலைநோக்கோடு எடுத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை மறந்தார்.

இன்டர்நெட் – இதன் தாக்கம் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கவில்லை ஆப்பிள். வோஸானியா எடுத்த சில தொழில்நுட்ப முடிவுகளும் தவறாகிப் போயின. நிறுவனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.

இம்முறை ஜான் ஸ்கல்லி பலியிடப்பட்டார். 1993-இல் ஜூன் மாதத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பானார் ஸ்கல்லி. அதன்பின் அவர் வெளியேற நேர்ந்தது.
ஸ்கல்லியை நகர்த்திவிட்டுத் தலைமை நாற்காலிக்கு வந்தவர் ஸ்பின்ட்வர். ஒரு காலத்தில் ஸ்கல்லியால் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஸ்பின்ட்வரும் 1996-இல் அகற்றப்பட்டார்.

இன்டர்நெட்டை ஏற்பதில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பின் தங்கியது. இன்டர்நெட் கலாச்சாரத்தை மையப்படுத்தியே மைக்ரோசாப்ட் முன்னணிக்கு வந்திருந்தது.

அமெரிக்க முன்னணி இதழ்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. “ஒவ்வொரு சமூகமும் தத்துவத்தால் வளர்கிறது. தனிமனிதனால் அழிகிறது” என்றார் கவிஞர் வைர முத்து.

தனிமனித மோதல்களாலும் தொலை நோக்கை இழந்ததாலும் வெற்றியின் உச்சத்தி லிருந்து விழுந்தது ஆப்பிள். என்றாலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கணினி என்னும் வரத்தை வழங்கிய மூலமூர்த்திகளில் முக்கிய மானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2005 ஜுன் 12இல், அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்வு குறித்தும் வந்திருக்கும் நோய் குறித்தும் பகிரங்கமாகப் பேசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். “இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு” என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்குதவியது.

ஓராண்டுக்கு முன்பு எனக்குப் புற்றுநோய் என்பது உறுதியானது. அதை குணப்படுத்தவே முடியாதென்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.

மற்றுமொரு சோதனையில் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்வரைதான். வாழ்கிற நாட்களை வீணே கழிக்காதீர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு உள்ளே ஒலிக்கிற குரலை புறக்கணிக்காதீர்கள். “உங்கள் குறிக் கோளுக்கே முதலிடம் கொடுங்கள்” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2011 அக்டோபரில் காற்றில் கலந்த அவரின் இறுதி சுவாசம், பூமிப்பந்தின் போக்கை திசை மாற்றிய அமைதியுடன் நிறைவடைந்திருக்கும் என்பதுதான் நம் பிரார்த்தனையும் நம்பிக்கையும்.



- மரபின் மைந்தன் ம. முத்தையா

ஒரே தளத்தில் உலகப் பத்திரிகைகள்!

உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினைhttp://www.newseum. org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் பெயர்களோடு டேப்கள் கிடைக்கின்றன. எனவே நாம் விரும்பும் நாட்டில், நகரம் மேப்பில் உள்ள இடத்தில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், என்ன செய்தித்தாள் என முன் பக்கத் தோற்றம் காட்டப்படுகிறது. அந்த செய்தித் தாளின் செய்திகளைப் படிக்க அதனைக் கிளிக் செய்து அதன் மின் பதிப்பைப் பெறலாம். தொடர்ந்து கிளிக் செய்தால், செய்தித்தாள் முழுவதும் படிக்கக் கிடைக்கும்.

ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளில் வெளியாகும் செய்தித்தாட்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அந்த நாளுக்குரிய செய்தித்தாள் கிடைக்கிறது. செய்தித்தாள் நிறுவனம் தன் பக்கங்களை மாற்றுகையில், இங்கும் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே பன்னாட்டு செய்திகளை ஒரே இணையதளம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு பெறுகிறோம்.

எந்தவிதத் தணிக்கையும் இன்றி காட்டப்படுவதால், சில வேளைகளில் நாட்டுக்கு நாடு பிரச்னைக்குரிய தடை செய்யப்பட்ட செய்திகளும் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Windows- 7 வேகமாக இயங்க!


விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்: ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும். இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.

3. தானாக இடம் மாறும் விண்டோ: மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும். வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும். இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக: விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும். இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்: பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது. இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள். பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்: லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனைhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.