Wednesday, May 25, 2011

இன்பாக்ஸ் !



தமிழான் சிறப்பு!

தலை சிறந்த மனிதர், விஞ்ஞானி என வருட வருடம், உலகின் புகழ்
பெற்ற பிரபலங்களை தேர்ந்தெடுத்து கௌரவபடுதும் அமெரிகாவின் "டைம்" பத்திரிகை, உலகின் 10 மோசமான( ignominious ) மனிதர்களை
சமீபத்தில் பட்டியல் போட்டது ! அந்த பட்டியலில் நம்ம . ராஜா இரண்டாம் இடம். தமிழனின் பெருமையை உலக அளவில் உயர்த்திய . ராஜாக்கு நன்றிகள்.


###############################################


..டி. நுழைவுத்தேர்வு: தமிழக அளவில் விபுல்
வெங்கட்ராமன் முதலிடம்!

இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு (..டி.,) தேசிய அளவில் நடந்த நுழைவுத் தேர்வில், சென்னையைச் சேர்ந்த விபுல் வெங்கட்ராமன் முதல் இடத்தையும்,
தேசிய அளவில், 63வது இடத்தையும் பெற்றுள்ளார்.


..டி. நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், 4 லட்சத்து, 60 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. முதல், 100 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அளவில், விபுல் வெங்கட்ராமன் முதலிம் இடம் பெற்றுள்ளார்.

########################################

இனிமேல் ராமதாசும், திருமாயும் என்ன செய்ய போகிறாகள். ஒருவர் தனது மகனை M.P ஆக்கவேண்டும் என்றே குறியாக இருந்தார். தனது சமுதாயத்துக்கு என்று எதுவும் செய்யாமல் தனது மகனுக்காக மட்டும் சிந்தித்தார். இன்னொருவர் ஒரு கட்சி தலைவராக , சுயமாக கட்சின் எதிர்காலத்தை மனதில் கொண்டவராக கூட்டணி முடிவை எடுக்காமல் , திமுகயுக்கு நன்றி பாராட்டுவதில குறியாக இருந்தார். இதனால்தான் தன் சமுக மக்களாலே ஒதுக்கப்பட்டனர். இனிமேலாவது இருவரும் தனது சமுகத்தின் எதிகாலத்தை பற்றி சிந்தித்தால் நல்லது.


############################################################
SMS:


A boy’s eye is faster dan Google in searching beautiful girl in a crowd but A boy’s heart is slower dan Govt bus, while proposing a girl whom he truely LOVES.

###############################################

Positive corner:

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

சலிப்பும் சிரமமுமாய் நடந்தது பயணம். மலையுச்சியை சென்றடைந்தபோது அவள் காதலன் அங்கிருந்தான். அந்தப் பழங்களை ஆசையுடன் வாங்கினான்.

நம் விருப்பத்திற்குரியவர்களுக்காக என்று தெரிந்திருந்தால் பயணம் இனித்திருக்கும் என்று கருதினாள். எல்லா முயற்சிகளும் நம் அன்பானவர்களுக்காகத்தான் என்று தெரிந்தால் எந்தப் பயணமும் சுமையில்லை.

#############

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில் நுழைத்தால் இன்னும் உள்ளொடுங்கி அமர்ந்தது. பிறகுதான் அந்த மனிதருக்குப் புரிந்தது. விடுதலை என்று அந்தக்கிளிக்கு வார்த்தைதானே தவிர வேட்கையல்ல. தங்கள் கூண்டுகளிலேயே சுகம் காண்பவர்களுக்கு விடுதலையின் இன்பம் விளங்காது.

#######################

சிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருடைய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத் தழுவியிருக்கிறேன். திரும்பத் திரும்ப விழுந்திருக்கிறேன். ”இதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்றார்.

விழுந்தவர்கள்தானே எழ முடியும்.


############################################################



கவிதை !!


எனக்கு அசையா

சொத்துதான் இல்லை !

சையும் சொத்தாவது

இருந்துவிட்டுப் போகட்டும்


காதலியேன் !!

****

நோக்கியா

சாம்சங்

சோனி எரிக்சன்

என

மாததிருக்கு ஒரு முறை

செல்போனை மாற்றி,

மாற்றம் அவசியம் என்கிறாய் .


பயபடாமல்

எப்படி இருப்பேன் !!!



*****
நீ கேட்டால்
தடுமாறாமல் சொல்வதற்கு
மனப்பாடம்
செய்து கொண்டிருக்கிறேன்.


என் பெயரை!!!

*******

பத்திரமாக

வைத்திருக்கிறேன்

உன் முதல் பார்வையை !!

**********



Positive Picture








Sunday, May 22, 2011

வேலை வழங்கும் விதவிதமான துறைகள்

வேலை வழங்கும் விதவிதமான துறைகள்
வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.

வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.
1. விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering.)
2. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance.)
3. பயோ டெக்னாலஜி (Bio Technology.)
4. பி-பார்ம் (B – Pharma.)
5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி (BPO Industry.)
6. கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
7. நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
8. பேசன் மேனேஜ்மென்ட்(Fashion Management).
9. மனித உரிமைகள் (Human Rights.)
10. விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
12. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
13. தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
14. பன்னாட்டு வாணிபம் (International Trade.)
15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம்(Management/Business Administration.)
16. ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
17. பொருள் மேலாண்மை (Material Management.)
18. உற்பத்தி மேலாண்மை (Production Management)
19. பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
20. கிராம மேலாண்மை (Rural Management.)
21. போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
22. சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
23. செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
24. மண்ணியல் (Geology.)
25. தோட்டக்கலை (Horticulture.)
26. விளம்பர மேலாண்மை (Advertising Management).

மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.


II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.


III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி

அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்.

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:

V போட்டித் தேர்வுகள்

இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.

இந்தப் பிரிவை

1) நுழைவுத் தேரிவுகள்
2) பட்ட படிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள்

என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

1) நுழைவுத் தேர்வுகள்


1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
3. ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
4. கம்பைடு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (ÚS«ÚLNÁ ÚLÖŸÍ)
5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
6. என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டிïட் ஆப் டெக்னாலஜி)
7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டிïட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்

1. வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical Engineering)
2. கட்டிடக்கலை (Architecture)
3. தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
4. பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation Engineering)
6. பயோ டெக்னாலஜி (Bio Technology)
7. கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
8. வேதிப் பொறியியல் (Chemical Engineering)
9. தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
10. கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
11. கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
14. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
15. தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
16. சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
17. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
18. கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
19. தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
20. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)
21. மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
22. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
23. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
24. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
25. எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
26. பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
27. உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
28. அச்சுப்பொறியியல் (Printing Technology)
29. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)

3) டிப்ளமோ படிப்புகள்

1. கட்டிடப் பொறியியல்
2. மின்சாரப் பொறியியல்
3. மின்னணுப் பொறியியல்
4. எந்திரவியல் பொறியியல்
5. உற்பத்திப் பொறியியல்
6. வேளாண்மைப் பொறியியல்
7. கணினி அறிவியல் பொறியியல்
8. மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
9. கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
10. வேதிப்பொறியியல்
11. தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
12. வேதித்தொழில்நுட்பம்
13. பாலிமர் தொழில்நுட்பம்
14. மென்பொருள் தொழில்நுட்பம்
15. மீன்வளத் தொழில்நுட்பம்
16. கைத்தறி தொழில்நுட்பம்
17. அச்சுத்தொழில்நுட்பம்
18. பிளாஸ்டிக் டெக்னாலஜி
19. சரிக்கரைத் தொழில்நுட்பம்
20. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
21. கணினித் தொழில்நுட்பம்
22. கார்மெண்ட் டெக்னாலஜி
23. மரத் தொழில்நுட்பம்
24. வனத்துறைத் தொழில்நுட்பம்
25. காலணிகள்த் தொழில்நுட்பம்
26. போர்மேன் டெக்னாலஜி
27. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
28. விற்பனைத் துறை
29. காஸ்மெட்டாலஜி


4) சான்றிதழ் படிப்புகள்

1. பிளாக்ஸ்மித்
2. தச்சுத்தொழில்
3. மோல்டர்
4. பெயிண் டர்
5. `டீட் மெட்டல் ஒர்க்கர்
6. கட்டடம் கட்டுபவர்
7. பேட்டரின் மேக்கர்
8. மெக்கானிக் டீசல்
9. பிளம்பர்
10. மெக்கானிக் கிரெய்ண்டர்
11. மெக்கானிக் மோட்டார்
12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
13. வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
15. ஒயர்மேன்
16. டர்னர்
17; மெக்கானிஸ்ட்
18. பிட்டசு
19. எலக்ட்ரோ பிளேட்டர்
20. ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
21. சர்வேயர்
22. இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
23. எலக்ட்ரீ சியன்
24. மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
25. கருவி வடிவமைப்பாளர்
26. டிராட்ஸ்மேன் சிவில்
27. டிராட்ஸ்மேன் மெக்கானிக்
28. மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
29. மெக்கானிக் ஜெனரல்
30. பிழைத்திருத்தல்
31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
32. எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
33. கட்டிங் அண்ட் டெய்லரிங்
34. காலணிகள் உருவாக்குதல்
35. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி.

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
இந்த பிரிவை

1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
2) மருத்துவம் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி
3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
4) உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
5) மனை அறிவியல்
6) பொதுப்பாடங்கள்
என 6 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


1) மருத்துவ நுழைவுத்தேர்வு

1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் - பூனே
2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - உ.பி
3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண் டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்
4. ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்ட மேற்படிப்புக்கான நிறுவனம் - புதுச்சேரி
5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் - உ.பி
6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி - வெள்ளுர்
7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - (புதுடெல்லி)

மருத்துவம் - பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி

பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
1. எம்.பி.பி.எஸ்.
2. பி.டி.எஸ்.
3. பி.ஹெச்.எம்.எஸ்
4. பி.ஏ.எம்.எஸ்
5. பி.எஸ்.எம்.எஸ்
6. பி.பார்ம்
7. பி.பி.டி.
8. பி.எஸ்.சி (நர்சிங்)
9. பி.ஒ.டி.

மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி

1. மருத்துவத் தொழில்நுட்பம்
2. லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
3. லேப் டெக்னீசியன்
4. இ.சி.ஜி டெக்னீசியன்
5. டெண்டல் மெகனிக்
6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
8. கோர்ஸ் இன் ஆப்டோமெட்ரி
9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
13. மருத்துவ நுன்னுயிறியல்
14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
15. பெரிபுïசன் டெக்னாலஜி
16. பிசியோதெரபி
17. ஸ்பீச் தெரபி
18. நர்சிங்

வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
2. பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்

உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்

1. விலங்கியல் - பி.எஸ்.சி
2. மீன்வளம் - பி.எஸ்.சி
3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
6. நுன்னுயிரியல் - பி.எஸ்.சி எம்.எஸ்.சி

மனை அறிவியல்

1. மனை மேலாண்மை
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து
3. குழந்தை வளர்ச்சி
4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
5. உணவு சேவை மேலாண்மை
6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
7. டெக்ஸ்டைல்ஸ் கிராப்ட்
8. உணவுத்தொழில்நுட்பம்
9. மனித ஊட்டச்சத்து
10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
11. உணவு உற்பத்தி
12. பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி

பொதுப்பாடம்

1. இயற்பியல்
2. வேதியியல்
3. தாவரவியல்
4. விலங்கியல்
5. பயன்பாட்டு புள்ளியல்
6. பயன்பாட்டு கணிதம

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
2. வங்கியியல்
3. சட்டப்படிப்பு - பி.எல்
4. மேலாண்மை - பி.பி.ஏ
5. பொருளாதாரம் - பி.ஏ
6. வணிகவியல்
7. டீச்சிங்
8. உலக அறிவியல்
9. உளவியல்
10. வரலாறு
11. புவியியல்
12. ஆங்கிலம்
13. மொழி
14. இசை
15. நிதி
16. ஊடகம்
17. தகவல் தொடர்பு
18. காஸ்ட்அக்கவுண்டன்சி

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1. உடற்கல்வி
2. சட்டப்படிப்பு
3. ஏவியேசன் - விமானப்பணிப்பெண்
4. பாஸ்மெட்டாலஜி
5. பேஷன் டெக்னாலஜி
6. காப்பீடு
7. கடல்சாரபடிப்பு
8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
9. புகைப்படம் பற்றிய படிப்பு
10. கலை/பயன்பாட்டுக் கலை
11. நகை வடிவமைப்பு
12. பேஷன் மாடலிங்
14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
18. நடிப்பு
19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
20 சின்மாட்மோகிராபி
21. இயக்கம்
22. டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
23. வீடியோகிராபி
24. பிலிம் எடிட்டிங்
25. நாடகக்கலை
26. பிலிம் டைரக்டிங்
27. சினிமா நடிப்பு
28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
29. பிலிம் எடிட்டிங்
30. படத் தயாரிப்பு
31. பிலிம் பிராசசிங்
32. பிலிம் ஸ்டடிஸ்
33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
34. பிரிஹேன்ட் அணிமே`ன்
35. பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜுகேசன்
36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
37. நிகழ்ச்சி மேலாண்மை
38. விசூவல் கம்ïனிகேசன்
39. புத்தக பதிப்பு
40. அரசியல் அறிவியல்
41. குற்றவியல்
42. விக்டிமாலஜி
43. நடனம்
44. ஜெம்மாலஜி
45. தொழிற்ச்சாலை வடிவமை?பு
46. பூமி பற்றிய அறிவியல்
47. நகரத் திட்டமிடல்
48. மண்ணியல்
49. சமூகவியல்


H. போட்டித் தேர்வுகள்

புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்?பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளை 1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.


1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1. பொறியியல்த்துறைத் தேர்வுகள்
2. வங்கித் தேர்வுகள்
3. இந்திய வனத்துறைத் தேர்வகள்
4. மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்
6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
7. சிவில் சரிவீஸஸ் தேர்வு
8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
9. ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்


2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1. சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
2. வருமானத்துறைத் தேரிவகள்
3. எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்

வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும்.
ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையை பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் "வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்'' உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.

தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளதுகுறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைகு வழிவகுக்கும்.


- thinathanthi..

Wednesday, May 18, 2011

Search Engine for Science !




தேடலுக்கான Web site என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் Website ,Google Website -க் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com.

கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ளhttp://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.

இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில், ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போது, முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி, பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.

இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து, அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.

இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும்,

1) அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.

2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.

3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும்.தொடர்ந்து பல ஆண்டுகளாக, அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி, கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படை யிலும் தேடலை மேற்கொள்ளலாம்.

தளங்கள் மட்டுமின்றி, பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும், இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.

அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது.