Wednesday, June 22, 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம் - அட்வைஸ் மழை!

அநேகமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒன்றிரண்டு "டர்னிங் பாயின்ட்'களாவது நிச்சயம் இருக்கும். தினமும் ஒரேமாதிரி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் யாராவது நமக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அதைப் பின்பற்றி நடந்தவுடன் நம்முடைய உலகமே தலைகீழாக மாறியிருக்கும். இல்லையா?இந்த விஷயம் நமக்கு மட்டுமில்லை, பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள், வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

அவர்களுடைய வெற்றிப் பயணத்தையும் ஒரு சின்ன அறிவுரை திசைமாற்றியிருக்கும்.அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பிரபலம் கேட்டி கௌரிக். அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை, "இதுபோல் பல துறைகளில் பெரிய அளவில் ஜெயித்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய அறிவுரை எது? ஏன்? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டால் எப்படி இருக்கும்?'கேட்டியின் இந்த திடீர் சந்தேகம் ஒரு சுவாரஸ்யமான புத்தகமாக மலர்ந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் "தி பெஸ்ட் அட்வைஸ் ஐ எவர் காட்'(The Best Advice I Ever Got). பில் கிளின்டன், காண்டலீஸா ரைஸ், இந்திரா நூயி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சல்மான் ருஷ்டி, பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ், மனோஜ் நைட் ஷ்யாமளன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குக் கிடைத்த மிக நல்ல அறிவுரைகள், ஆலோசனைகள், அனுபவங்களை இதில் கொட்டியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு, எந்தக் கட்டுரையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களைத் தாண்டுவதில்லை. சின்னச் சின்ன டிப்ஸ்கள் சுலபமாக மனதில் பதிகின்றன, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கின்றன.பல பிரபலங்கள் வழங்கிய இந்த "பிராக்டிகல் அட்வைஸ் மழை'யிலிருந்து, உங்களுக்காகச் சில துளிகள் இங்கே

:* வாழ்க்கை என்பது சமையல் குறிப்பு அல்ல. இதற்குப் பிறகு இதைச் செய்யவேண்டும், இவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் விதிமுறை போட்டுவைக்கவில்லை. நீங்கள் எந்தக் கட்டாயங்களையும் பின்பற்றவேண்டியதில்லை. ரிலாக்ஸ், ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவியுங்கள், வாழ்க்கையின்போக்கில் மிதந்து செல்லுங்கள்.

* உங்களுக்கு ஒரு விஷயம் தேவை என்றால் அதை நேரடியாகக் கேட்கத் தயங்காதீர்கள். அப்படிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தால், கூச்சப்பட்டால் வேலை நடக்காது.

* நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? ஏன்? இந்த விஷயத்தை நீங்களே கூர்மையாக ஆராய்ந்து பாருங்கள். அதனைத் தாண்டுங்கள்.

* அதற்காக, "நான் பயமே இல்லாமல் வாழ்வேன்' என்று ஆரம்பித்துவிடாதீர்கள். பயம் நல்லது. பல சமயங்களில் அதுதான் உங்களைச் சரியான பாதையில் நகர்த்திச்செல்கிறது.

* பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள், அவை மாறுவேஷத்தில் வரும் வாய்ப்புகள்!

* முயற்சி தவறிவிட்டதா? சறுக்கிக் கீழே விழுந்துவிட்டீர்களா? தப்பில்லை, மறுபடி எழுந்து நிற்காவிட்டால்தான் தப்பு.

* எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? என்று புலம்பாதீர்கள். எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கிறது. டென்ஷனை விட்டு முன்னே போகிற வழியைத் தேடுங்கள்.

* எது சுலபமாக இருக்கிறதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியோ அதைச் செய்யுங்கள்.



----என். சொக்கன்

கான்பிடன்ஸ் கார்னர் !!!

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு

சிரித்து விடுங்கள். “குருவே! அதுவும் முடியவில்லை!” குரு சொன்னார், “அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.”


###########################

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ.

தன்னுடைய தனித்தன்மையை நம்புபவர்கள் மற்றவர்கள் சதியில் மலைப்பதில்லை.


###########################

தனக்குப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, நிறுவனத்தின் தலைவர், யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். “அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?” என்று கேட்டபோது

அவர் சொன்னார், “நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் நேசிக்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரை தண்டிப்பது என்ன நியாயம்?”


#########################

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலிருந்து கற்கவேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டார். கவனக் குறிப்பு, களத்தில் முடிவெடுத்தல் என்று பலரும் பல விதமான பதில்களைச் சொன்னார்கள். ஒரு மாணவன் சொன்னான், ”நூறு மீட்டர்கள் ஓடுவதற்காக, நாளொன்றுக்கு பல கிலோ மீட்டர்கள்

ஓடிப்பயணம் செய்கிறார்கள். இந்தப் பயிற்சிதான் அவர்களை வெற்றி யாளர்களாக்குகிறது. குறைந்த பட்ச தூரத்திற்காக அதிகபட்ச தூரத்தை ஓடிக் கடக்கும் பொறுமையும் ஈடுபாடுமே முக்கியமான பாடங்கள்.”


Sunday, June 12, 2011

WIN -மொழி !

"குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை' என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"என்ன பிரச்னை?' என்று கேட்டார்."என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை' என்றான் இளைஞன்.வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்."ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. "பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கேட்டான். உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, "இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்' என்றார்.நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை.

இந்த மோதிரம் விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.அப்போது அந்தப் பெரியவர், "இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்' என்று சொன்னார்.பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர். அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.'இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.அப்போது

அவனுக்கு குரு சொன்ன வின் மொழி :திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.


- ranjan, kumudham.