Thursday, August 28, 2014

குட்டி கதைகள் !!!

அந்த நதியின் மேற்பரப்பு பனியால் இறுகியிருந்தது. கால் வைத்துக் கடந்தால் உடைந்து உள்ளே இழுத்துவிடுமோ என்ற தயக்கத்தில் கைகால்களை மண்டியிட்டு தவழ்ந்து அங்குலம் அங்குலமாய் தாண்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். ”தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று குரல் கேட்டது. கையில் இருபது கிலோ எடையுடன் வேக வேகமாய் ஒரு பெரியவர். நதியைத்தாண்டியதும் சொன்னார், ”உறைந்த நதி என்பது ஓடிக் கடக்க ஒரு வாய்ப்பு. நல்ல வாய்ப்புகளை சந்தேகத்துடன் அணுகினால் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்காமலேயே போய் விடுவாய்” என்று.
**************************************************************
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார், “அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.” அச்சமின்மையே ஆரோக்கியம்!
**************************************************************
டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய் இருந்தது. சோம்பல் முறிந்து, பேசிச் சிரித்து, பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவர்கள், ரத்தன்டாடா உடனில்லாததை உணர்ந்து அங்குமிங்கும் தேடினார்கள். தேநீர் பருகப் போனரா ஓய்வெடுக்கப் போனாரா என்றெல்லாம் யோசித்தால், ஓட்டுநர் அருகே சாலையில் மண்டி யிட்டு, சக்கரத்தை மாற்ற உதவிக் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. நெற்றியில் வியர்வை… இதழ்களில் புன்னகை… நெஞ்சில் மனிதம்!!
பெரிய மனிதர்கள் எளிமையானவர்கள் ,ஒவ்வொரு விதத்திலும் முழுமையானவர்கள்.
**************************************************************
குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?” மீன் சொன்னது. “இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன். அந்த வகையில் இந்தக் குளத்தில்  எனக்கு நிறைய கடமை உண்டு. கடமையை செய்பவர்களுக்கே உரிமை அதிகம்” என்றது மீன். சுதந்திரமாய் இயங்க சரியான வழி கடமையைச் செய்வதுதான்.
**************************************************************
பறக்கத் தயங்கும் பறவைகள் இரண்டை, பிரியமுடன் வளர்த்து வந்தார் அந்த அரசர். அவை நன்கு பறக்க வழி செய்பவர்களுக்கு சன்மானம் உண்டென அறிவித்தார். பலரும் பலவிதமாய் முயன்றார்கள். ஒருவர் மட்டும் வெற்றிகரமாய் பறக்கவிட்டார். பறவைகளை கிளையொன்றில் அமரவைத்து கிளைகளை அவர் திடீரென்று வெட்டியதும் பதறிய பறவைகள் பறக்கத் தொடங்கின. உள்ளிருக்கும் சக்தியை உசுப்பினால் தயக்கமின்றி பறக்கலாம் எல்லோரும்!!
**************************************************************
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’ குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”. “என்னால் முடியவில்லையே”! “அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!” “சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள். “குருவே! அதுவும் முடியவில்லை!” குரு சொன்னார், “அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.”
**************************************************************
சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கைதி, ஒரு நதியைக் கடந்தாக வேண்டும். இருட்டில் ஓடிவந்தவன் தட்டுத்தடுமாறி படகொன்றில் ஏறி வேகவேகமாய் துடுப்புப் போடத் தொடங்கினான். திசை தெரியாததாலோ என்னவோ மறுகரை வரவேயில்லை. துடுப்பு பிடித்தபடி தூங்கிப் போனான். காலையில் அவனை எளிதாகக் கைது செய்தனர். காரணம், கரையோரம் கட்டப்பட்டிருந்த படகின் கயிற்றை அவிழ்க்காமலேயே துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். பழைய பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளாத போது…. விடுதலை ஏது?


Wednesday, August 20, 2014

இணையத்தில் தினந்தோறும் கற்றுக் கொள்ள !


      இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.'இணையத்தில் கற்றுக் கொடுக்கும் தளங்கள் பல இருந்தாலும், கீழே மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளங்களாக ஆறு தரப்பட்டுள்ளன. நீங்கள், இதுவரை இவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக இவற்றைக் கண்டு, தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி. அவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஐ ட்யூன்ஸ் (iTunes): இணையத்தில், தகவல்களைப் படிப்பதைக் காட்டிலும், கேட்பதனை நீங்கள் விரும்பினால், உங்களுக்கேற்ற தளம் ஐ ட்யூன்ஸ். இங்கு பலவகையான கற்றுக் கொள்ளும் கல்வி சார்ந்த பாட்காஸ்ட் (podcast) எனப்படும் கல்வி வீடியோக்கள் உள்ளன. ஒரு புதிய மொழி கற்றுக் கொள்ள வேண்டுமா, தற்காப்புக் கலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா, புகைப்படக் கலை, நிதி நிர்வாகம் -- இப்படிப் பல வகையான பாட வீடியோக்கள் இங்கு கிடைக்கின்றன. இவை எல்லாமே கல்வி என்பதன் கீழ் தரப்படவில்லை. எனவே நீங்கள் விரும்புபவற்றைத் தேடல் மூலம் தெரிந்து கொண்டு, பயன்படுத்துவது எளிதாக அமையும். ஆர்வமூட்டி நம்மை அசத்தும் பல விஷயங்கள் iTunes U என்ற பிரிவில் பார்க்கலாம். இந்த கல்வி வீடியோக்கள் அனைத்தும் இலவசமே. இவற்றை ஸ்டான்போர்ட், யேல், ஹார்வேர்ட் போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் தயாரித்து வழங்கியுள்ளன. உங்களிடம் ஐபோன், ஐபாட் அல்லது ஐபேட் இருந்தால், இவற்றைப் போகிற போக்கில் பெற்று, பயன்படுத்தலாம்.

https://itunes.apple.com/us/genre/podcastseducation/id1304?mt=2 

2. ரெட்டிட் (Reddit): புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள, வெகு எளிதான வகையில், வழியில் விஷயங்களைத் தரும் தளமாக ரெட்டிட் இயங்குகிறது. அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ள ஓர் இணைய தளம் இது என அறிவித்து, உலகின் பல்வேறுமுனைத் தகவல்களை இத்தளம் தருகிறது. இங்கு கிடைக்கும் தகவல்கள் அடங்கிய வீடியோ பைல்களைப் போல வேறு எங்கும், ஹார்ட்வேர்ட் பல்கலை தளம் உட்பட, கிடைக்காது. ஆர்வமூட்டி, பொழுது போக்கும் வகையில் அரிய தகவல்களைக் கற்றுத் தருவது, இந்த தளத்தில் உள்ள பல வீடியோ பைல்கள், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன. 

http://www.reddit.com/

3. விக்கிபீடியா: இணையத்தில் கற்றுக் கொள்ளுதல் என்றால், அந்த கட்டுரையோ, பட்டியலோ, விக்கிபீடியாவினைக் குறிக்காமல் முழுமை பெறாது. பல அரிய தகவல்களின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக இது இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிறர் அறியவும், கற்றுக் கொள்ளவும் இதில் பதிந்து வைக்கலாம். இந்த தளத்தில் கற்றுக் கொள்வதற்கான வழிகள் எனச் சிலர் கட்டுரை அமைக்கும் அளவிற்கு, இதில் அளப்பரிய தகவல்கள், வெவ்வேறு வழிகளில் தரப்பட்டுள்ளன.

www.wikipedia.org/

4. ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ் (HowStuffWorks): வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையான வகையில் ஒன்ற அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் HowStuffWorks ஆகும். ""இதெல்லாமா!'' என்று நாம் எண்ணிப் பார்த்து மலைக்கவைக்கும் விஷயங்கள் குறித்து, மிக முழுமையாகத் தகவல்களைத் தருவது இத் தளத்தின் சிறப்பு. ஏதேனும் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள இதனைப் படிக்கையில், அது தொடர்பானவை குறித்து, அதே தளத்தில் சொல்லப்பட்டிருந்தால், அவற்றிற்கு லிங்க் தரப்படுவது இதன் சிறப்பு. அத்துடன், கட்டுரையின் இறுதியில், நாம் மேலும் பார்க்க வேண்டிய இணையதளங்களையும் பட்டியல் இட்டு, நம் கற்றலை ஒரு தொடர்கதையாக இந்த தளம் நீட்டிக்கிறது. நாம் தேடிப் பெறும் வகையில் இது பல பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.

www.howstuffworks.com 

5. இன்ஸ்ட்ரக்டபிள்ஸ் (Instructables): உங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொண்டு ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது. செயல்முறைகளை நேரடியாக இந்தத் தளம் கற்றுக் கொடுக்கிறது. உணவு தயாரிக்கும் முறை, சிறிய கலைப் பொருள் தயாரித்தல், ஆபரணங்களை வடிவமைத்தல், கைவினைப் பொருள் தயாரித்தல், தோட்டக்கலை என இந்த தளம் தரும் வகை வகையான செயல்பிரிவுகள் நீள்கிறது. உங்கள் கற்றலைத் தூண்டும் வகையில், பல போட்டிகளையும் இந்த தளம் தருகிறது. இந்த போட்டிகளில் வெற்றிகரமாகப் பங்கு பெற்றால், பரிசுகளும் தரப்படுகின்றன.

6. கான் அகடமி (Khan Academy): விக்கிபீடியா தளத்தைப் போல அரிய பல தகவல்களைக் கொண்டு இந்த தளம் இயங்குகிறது. இதில் 4,100 வீடியோக்களுக்கு மேலாகப் பதியப்பட்டுக் கிடைக்கின்றன. எல்லாவகை கல்விப் பிரிவுகளிலும் வீடியோக்கள் கிடைக்கின்றன. மேத்ஸ், பிசிக்ஸ், நிதி, சரித்திரம் என வகை வகையான பிரிவுகளில், இவை அமைக்கப்பட்டுள்ளன. நூறு வகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பதியப்பட்டுள்ளன. உங்களுக்கு எந்த கல்வி அல்லது திறன் பிரிவில் தகவல் வேண்டுமோ, அதனைக் குறிப்பிட்டு பதிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, அவை குறித்த தகவல் சுருக்கமாக அனுப்பப்படும்.


மேலே குறிப்பிட்ட தளங்களுடன், இன்னும் பல தளங்கள் இது போல தகவல் களஞ்சியங்களாகவும், கற்றலுக்குப் பயன் தரும் வகையில் செயல்படுபவையாகவும் உள்ளன. இவற்றைத் தேடிப் பார்த்து நம் கற்றலை விரித்துக் கொள்வது நமக்கு நல்லதாக அமையும்.

flipkart.com vs amazon.com

        Iron Box  இருந்து FRIDGE வரை எந்தப் பொருளாக இருந்தாலும் , அதை வாங்குமுன் கடை கடையா ஏறி இறங்கி , ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நாம் வழக்கம். ஆனால் , இன்றைக்கு E- Commerce   வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா  பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது . இனிவரும் காலத்திலும் பலரும் E- Commerce மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பு இருப்பதால் , இந்த துறையில் இருக்கும்  நிறுவனங்களிடம் பெரும் போட்டி  நிலயுகிறது. குறிப்பாக flipkart - amazon   நிறுவனங்களிடம் கடும் போட்டி நடக்கிறது.

     Flipkart one billion dollars ( Rs.6000 Cr) நிதியை திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடைவதற்குள், amazon 2 billion dollers ( Rs.12,000 cr)  முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாகதுக்காக ஒதுக்கிவிட்டது.

     E - Commerce நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய E - Commerce நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

     
          flipkart , amazon  போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையளைர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர் , அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடுகிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம் ;அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.
         
               E - Commerce நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது.1999 - 2000 ஆண்டுகளில் .COM என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போனது, ஆனால் , இன்று E - Commerce துறையும் அப்படி நொடிந்து போகும் என்று சொல்லிவிட  முடியாது . காரணம் , மக்களின் வேலை , அவர்களால் shopping -க்கு  என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை அதனால் online வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

Retail நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 % லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன . ஆனால் , amazon , flipkart போன்ற நிறுவனகள் retail நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் தருகின்றன.

   இதைத்தான் நன்றாக கவனிக்க வேண்டும் . இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இது போன்ற offer களை அள்ளி வழங்குகின்றன . இவர்களது நோக்கம் தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

       தற்போது 1 Billion -னை திரட்டியுள்ள flipkart   இந்த பணத்தை அப்படித்த செலவு செய்யும் . 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில் , இது போன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு , நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை ; இதற்கு பயன்படும் பணியாளகளின் எண்ணிக்கை குறையு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறையுதான் . ஆனால் , அதற்கும் அதிகமாக offer -ரில் பொருட்களை விற்பதற்கும் இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.
       
     அமெரிக்க Amazon -னை இந்திய flipkart -டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த  கேள்வி . அமேசானும் flipkart போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் .அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிருதிக்குள்ள , குறைந்த விலையில் offer - களை வழங்கி வருகிறது .

         இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன . ஏன் என்றால் உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா . இங்குதான் அவர்களால் அதிக வாடிகையாளகளைத் தொடர முடியும் .

         amazon போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால் , flipkart டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை flipkart கையளும்பட்சத்தில் amazon னுக்கு flipkart சவாலாக இருக்கும். உதாரணமாக , ப்ளிப்கர்ட் இப்போது  எப்ப்கார்ட் எனும் courier வசதியை கொண்டுள்ளது . இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான் . இன்னும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் . மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும் , அதிகமானோர் நம்பிக்கை இல்லாமையால் இந்த முறையைத்தான் தொடருகிறாகள். இது மாறினாலே E -Commerce துறையின் நம்பிக்கை அதிகரித்து , நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்க தொடங்கிவிடும்.
     
          இதில் கடைசி பலன் யாருக்கு எனில், வாடிக்கையாளருக்குதான் .இவர்களது போட்டியில் அதிகம் offer களை வழங்குவார்கள் . இருந்தாலும் அதே வாடிக்கையாளர்களை எந்த நிறுவனம் திருப்திபடுத்தி தொடருந்து இணைப்பில் இருக்க வைக்கிறதோ அவர்கள் கையில்தான் E - Commerce துறை இருக்கும் .

          Online வர்த்தகம் என்று வரும்போது உள்நாடு நிறுவனமா , வெளிநாடு நிறுவனமா என்று வாடிக்கையாளர்பார்க்கமாட்டார்கள்  குறைந்த விலை,அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ , அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் .flipkart நிறுவனம் வாடிக்கையாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில் , amazon நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும் !



-  நாணயம் விகடன் ......