Thursday, April 21, 2011

உங்கள் எதிரி யார்?


நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.


--அத்வைத் சதானந்த்

Monday, April 18, 2011

பயனுள்ள சில இணைய தளங்கள்!

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு Facebook இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல Gmail, Yahoo, microsoft, teitter போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள். Search engin- நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை Search engin-கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம்.

1. டேஸ்ட்கிட் (Tastekid): புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To): ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/

Google ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:

1. ஜூங்கல் (Joongel): இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது. ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி:http://www.joongel. com/index.php

2.ஸ்குரூகிள் (Scroogle): Google தேடுதளத்தில் தேடுகையில், cookies நம் கம்ப்யூட்டரில் பிற்பாடு எளிதாக இருப்பதற்காகப் பதியப்படும். அதாவது நம்முடைய Personal விருப்பங்கள் அதில் பதிந்து வைக்கப்படும். நாம் எந்த தளத்திற்கெல்லாம் செல்கிறோம் என்ற பட்டியலும் பதிந்து வைக்கப்படும். இவை இல்லாமல் உங்கள் தேடலை மேற்கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது: www.scroogle.org/cgibin/scraper.htm.

3.சூப்பர் குக் (Supercook): பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும். இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.
இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/

இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன.

1. ஜாமென்டோ (Jamendo): ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி: http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த இயந்திரன் ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது.

2. நட்சி (Nutsie): உங்களுடைய ஐபாடில் உள்ள பாடல்களை இணையத்திற்குக் கொண்டு சென்று, அவற்றை அங்கு வைத்தே கேட்டு ரசிக்கலாம். இது மற்றவர்களுக்கு கிடைக்காது. வேறு இணையான கம்ப்யூட்டர் மூலமும் இந்த தளம் சென்று இவற்றை ரசிக்கலாம். முகவரி: http://www.nutsie.com/main ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.

1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection): இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/

2. கீ எக்ஸ் எல் (keyxl): ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.keyxl.com/

மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.

1. சி.எல்.1.ப்பி. நெட் (cl1p.net): இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள். இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும். பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: http://cl1p.net/

2. வெப் 2 கால்க் (web2calc): இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/

3. ரெய்னி மூட் (rainymood): ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/

4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி:http://whathappenedinmybirthyear.com/

மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது Google , Yahoo எல்லாம் இல்லை. DVD இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம்.


- computer Malar

Friday, April 15, 2011

WIN -மொழி !


"குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே' என்றார் குரு.

"என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே'என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

"ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள்.

மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, "தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்' என்று சொல்லி போய்விட்டார்.

இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.

அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், "என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா' என்று. இளைஞர்கள் "இல்லை'யென்று தலையசைத்தார்கள்.

"அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.' என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.'

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்குச் சொன்ன WIN -மொழி:

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி!

- ranjan , Kumudam.

Thursday, April 14, 2011

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "Hero"-வின், "Flashback"


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.


புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட"' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.


பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:


* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.


* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.


* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.


* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.


* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.


* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.


* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.


* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'


-Dinamalar.

Monday, April 4, 2011

Inbox!

philippines kaiyukan நகரில் அமைந்துள்ளது சுண்ணாம்பு பாறைகள் நிறைந்ததேசியப் பூங்கா. Puerto Princesa நதிக்கரையில் அமைந்துள்ள இதன் அழகை படகில் பயணம் செய்துகொண்ட பார்த்து ரசிக்கலாம். அங்காங்கே சின்ன குகை மற்றும் தீவு போல அமைந்திருக்கும் அதன் அழகே தனிதான்.
Puerto Princesa நதிக்கு ஒரு சிறப்பு உண்டு. சுண்ணாம்பு பாறைகளுக்கு அடியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நதி செல்கிறது. எனவே இதனை உலகின் எட்டாவது அதிசயம் என்கிறார்கள்.


******************************** *********************************


World Cup 2011.


# kirit & co - british jewellery என்ற நிறுவனம்தான் Trophy யை வடிவமைத்து கொடுத்தது.


# இதன் உயரம் 60 . cm., எடை 11 கிலோ. CUP - இன் நடுவில் உள்ள உலக உருண்டை மட்டும் தங்கத்தால் ஆனது. உலகத்தை தாங்கிப் பிடிக்கும் 3 பட்டைகள் வெள்ளியால் ஆனது.


# 1999 - ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நடந்த உலககோப்பையை வென்ற அணிகளுக்கு வெவ்வேறு வடிவங்களில் கோப்பைகள் வழங்கப்பட்டது . இப்போது வழங்கப்படும் கோப்பை முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தான் அறிமுகபடுதப்பட்டது.


# வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பை உண்மையானது இல்லை . இது I.C.C தலைமை அலுவலகமான துபையில் உள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாதிரி உலக கோப்பைதான் வழங்கப் படுகிறது.

********************************************************************


தேர்தலில் குறிப்பிட்ட பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட நிற்பவரே வேட்பாளர். ஆங்கிலத்தில் " Candidate " என்கிறார்கள். இந்த ஆங்கில சொல் எப்படி வந்தது?. பழங்கலத்தில் ரோமாபுரியில் தேர்தலின் போது ஒரு வேட்பாளர் , வெள்ளை குதிரை மீது பயணித்து பிரசாரம் செய்தார். அவரை Candidates ( வெள்ளை ஆடை அணிந்தவர் ) என்று மக்கள் அழைத்தார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது.


*******************************************************************************



Leonardo Da Vinci - யின் புகழ்பெற்ற ஓவியமான Monalisa ஓவியத்தில் Monalisaa - விற்கு புருவங்கள் இருக்காது. அந்த ஓவியம் வரையப்பட்ட காலத்தில் புருவங்களை எடுத்துவிடுவது Fashion. ******************************************************************************


தகவல் களஞ்சியம்.


# ஒட்டகம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வீதம் 18 மணி நேரம் தொடர்ந்து பாலைவனத்தில் நடந்து செல்லும்.

# நாய் தூங்கப் போகும்போது தூங்க போகிற இடத்தை மூன்று முறை சுற்றி வருமாம்.


# பூச்சி இனங்களில் அதிக அறியுடையது எறும்பு.


# குறட்டை விட்டு தூங்கும் போது கனவு வராது.


# ஆண் சிங்கம் ஒரே நேரத்தில் 35 கிலோ கறியை வரை சாப்பிடும்.


***********************************************************************


SMS கடி!


Professor : எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியலையோ அவன் முட்டாள்


Student : புரியல சார் .


***********************************************************************


கவிதை - நட்பு


நீ என்னிடம் பேசியதை விட

எனக்காக பேசியதில் தான்

உணர்ந்தேன் நம் நட்பை !!


*****

தினம் திட்டும்

அப்பாவின் வார்த்தைகளைவிட

திட்டாமல் நகரும்

நண்பனின் மௌனம்

கொடுமையானது !


*******


உண்மையான நட்புக்கு மட்டுமே

உன் கண்ணீர் துளிகள் தெரியும் !

நீ மழையில் நனைந்து கொண்டே

அழுதாலும் கூட !!


******


போகிற இடத்தில என்னை விட

அழகான , அறிவான ஒருவன்

இருந்து விடுவனோ என்ற பயம்

நட்புக்கு இல்லை!


- அறியுமதி .


****************************************************************************

படித்ததில் பிடித்தது!

Don't judge a person by wat others say..
The person may be true to u…

But not to others…!

B'coz the same SUN which melts the ice..

Hardens the clay too!