Wednesday, March 30, 2011

A small moral story!


A group of frogs were hopping contentedly through the woods, going about their froggy business, when two of them fell into a deep pit. All of the other frogs gathered around the pit to see what could be done to help their companions. When they saw how deep the pit was, the rest of the dismayed group agreed that it was hopeless and told the two frogs in the pit that they should prepare themselves for their fate, because they were as good as dead.

Unwilling to accept this terrible fate, the two frogs began to jump with all of their might. Some of the frogs shouted into the pit that it was hopeless, and that the two frogs wouldn't be in that situation if they had been more careful, more obedient to the froggy rules, and more responsible. The other frogs continued sorrowfully shouting that they should save their energy and give up, since they were already as good as dead. The two frogs continued jumping as hard as they could, and after several hours of desperate effort were quite weary.

Finally, one of the frogs took heed to the calls of his fellows. Spent and disheartened, he quietly resolved himself to his fate, lay down at the bottom of the pit, and died as the others looked on in helpless grief. The other frog continued to jump with every ounce of energy he had, although his body was wracked with pain and he was completely exhausted. His companions began anew, yelling for him to accept his fate, stop the pain and just die. The weary frog jumped harder and harder and - wonder of wonders! Finally leapt so high that he sprang from the pit.

Amazed, the other frogs celebrated his miraculous freedom and then gathering around him asked, "Why did you continue jumping when we told you it was impossible?" Reading their lips, the astonished frog explained to them that he was deaf, and that when he saw their gestures and shouting, he thought they were cheering him on. What he had perceived as encouragement inspired him to try harder and to succeed against all odds.

This simple story contains a powerful lesson. The book of Proverbs says, "There is death and life in the power of the tongue." Your destructive words can cause deep wounds; they may be the weapons that destroy someone's desire to continue trying - or even their life. Your destructive, careless word can diminish someone in the eyes of others, destroy their influence and have a lasting impact on the way others respond to them. Your encouraging words can lift someone up and help them make it through the day.

Be careful what you say. Speak life to (and about) those who cross your path. There is enormous power in words. If you have words of kindness, praise or encouragement - speak them now to, and about, others. Listen to your heart and respond. Someone, somewhere, is waiting for your words...

Monday, March 28, 2011

Win- மொழி


"குருவே, எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது' என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.


"ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்னை வருது?' என்ற குருவின் கேள்விக்கு, வந்தவன் செய்த தொழில்களைப் பட்டியலிட்டான்.


"பாருங்க குருவே, இத்தனை தொழில் செய்தும் எதிலும் எனக்கு முன்னேற்றம் கிடைக்கல.'வந்தவனின் குறைபாடு குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.


"ஒருவனுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் கிணறு வெட்டக் கிளம்பினான். கிணறு வெட்ட இடம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த பெரியவர் ஒருவர், ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கிணறு வெட்டச் சொன்னார். அவனும் அங்கு தோண்ட ஆரம்பித்தான்.


சிறிது ஆழம் தோண்டியிருப்பான், அந்தப் பக்கமாய் போன வழிப்போக்கன் ஒருவன், "ஏம்பா அங்க தோண்டுற, அங்கலாம் பாறைதான் ஜாஸ்தி. இந்த இடத்துல தோண்டு' என்ற வேறு ஒரு இடத்தை காட்டிவிட்டுப் போனான். நம்ம ஆள் உடனே அங்க தோண்ட ஆரம்பித்தான்.அப்போது அந்த வழியே போன இன்னொரு ஆள் அவனை வேறு இடத்தில் தோண்டச் சொல்ல, மீண்டும் இடத்தை மாற்றினான்.


இப்படியே ஒரு மாத காலம் போனது. ஒவ்வொருவர் பேச்சைக் கேட்டுக் கேட்டு இடங்களை மாற்றிக் கொண்டிருந்ததில் அவன் எந்த இடத்தையும் முழுமையாய் தோண்டியிருக்கவில்லை.அந்த சமயம் முதலில் வந்த பெரியவர் அந்தப் பக்கம் வந்தார். அவனுடைய குழப்பத்தை உணர்ந்தார்.


"இப்படி மாறி மாறி தோண்டியதற்கு பதில் அந்த உழைப்பை ஒரே இடத்தில் காட்டியிருந்தால் நல்ல நீர் சுரக்கும் கிணறு உனக்குக் கிடைத்திருக்கும்' என்றார்'.


இந்தக் கதையை குரு சொல்லி முடித்தபோது எந்தத் தொழிலையும் தான் முழுமையாய் செய்யாமல் பாதியிலேயே விட்டது, வந்தவனுக்குப் புரிந்தது.அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி:இலக்குகளை மாற்றிக் கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது!-


- ரஞ்சன் , குமுதம் வார இதழ்.

Saturday, March 26, 2011

Popular Brand Name !!

நாம் எந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரை வைத்து அதன் தரத்தை அளவிடுகிறோம். அதனால் அனைத்து நிறுவனக்களும் தங்களுக்கு என ஒரு Logo - வையும் , Brand Name - மையும் உருவாக்கி வைத்துள்ளனர். ரொம்ப Popular இருக்கும் நிறுவனத்தின் Logo - யும் , அதன் - Brand Name உருவான கதையும்.


WIPRO - Western India Palm Refined Oil Ltd.. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் தயாரித்து விற்பனை செய்த பொருள் வனஸ்பதி !. ஆனால் , இன்று சாப்ட்வேர் உலகில் முன்னணி நிறுவனம்.

*******

Jhon Warnock மற்றும் Charles Geschke இருவரும் 1982 - இல் adobe நிறுவனத்தை ஆரம்பித்தபோது தங்கள் Brand பெயரை வைக்க யோசித்துகொண்டிருந்தர்கள் . கடைசியில் கலிபோனியாவில் Jhon வசித்த வீட்டுக்கு பின்புறம் ஒரு சின்ன ஆறு ஓடியது. அதன் பெயர்தான் ' Adobe' . அந்த பெயரை தங்களோட நிறுவனத்துக்கு வைத்துவிட்டார்கள்.

**********

Yahoo - Yet Another Hierarchical Officions Oracle
'Jerry and David's Guide to the World wide web' என்ற பெயர்தான் இந்த நிறுவனத்தின் ஆரம்ப கால Brand Name. . பிறகு தங்கள் நிறுவனத்தின் பெயரை Yahoo என்று மாற்றிவிட்டார்கள்.


*********


' Voice Data Telephone ' என்பதன் Short Form- தான் Vodafone. தனது முதல் மொபைல் அழைப்பை இங்கிலாந்த் நாட்டில் 1985 -ஆம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்தது.

*********

அமெரிக்காவில் உள்ள San Francisco என்ற பெயரின் இறுதி பகுதி இருந்து உருவானதுதான் ' சிஸ்கோ'.

************

' Andrason Consulting ' என்ற நிறுவனம் தனது பெயரை மாற்ற நினைத்து அது குறித்து தனது ஊழியகளிடம் கேட்டது . நார்வே நாட்டை சேர்த்த ஊழியர் ஒருவர் ' Accent on the future' என்று சொல்ல , அதை கொஞ்சம் சுருக்கி ' Accenture' என்று மாற்றினார்கள்.

***********


Information Systems - இதை சுருக்கி உலக IT துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான 'InfoSys' பெயர் வைத்தார்கள்.

Wednesday, March 23, 2011

Confident Corner !!


சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார்.
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.
************************************************************************************

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று.
*******************************************************************************

வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது.
மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். “இன்னும் முன்னால் போ” என்றார். இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. “இன்னும் முன்னால் போ” என்பதுதான்!!
*********************************************************************************

யார் பிச்சைக்காரன் என்பதில் ஓர் அறிஞர் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தது. அவர் தெளிவாகச் சொன்னார். “பிச்சை எடுப்பவனை எல்லாம் பிச்சைக்காரன் என்று சொல்ல முடியாது. சராசரியான பிச்சைக்காரன் ஒருவனின் வாழ்க்கையை முதலில் பாருங்கள். மூன்று அம்சங்கள் தெரியும். முதலாவதாக, எது நடக்க வேண்டும் என்பது அவன்
கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது, அவன் விரும்புவது அவனுக்குக் கிடைப்பதில்லை. மூன்றாவதாக அவன் விரும்புவது கிடைத்தாலும் தேவையான அளவுகளில் கிடைப்பதில்லை. இந்த மூன்று குறைகள் எவனுக்கு ஏற்பட்டாலும் அவன் பிச்சைக்காரன்தான். இந்தக் குறைகள் இல்லையென்றால் ஒரு பிச்சைக்காரன் கூட பணக்காரன்தான்.”
**********************************************************************************

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார்.

Saturday, March 19, 2011

win - மொழி



"குருவே, என் பாசமகள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். அவள் மீது அத்தனை அன்பாய் இருக்கிறேன். ஆனால் அவள் விலகிப் போகிறாள்' என்று வருத்தத்தோடு சொன்னான் ஒருவன்.

"அப்படியா, என்னாச்சு' என்று அமைதியாக வினவினார் குரு.

"என்னால் அவளைப் பிரிந்து சிறிது நேரம் கூட இருக்க இயலாது. கல்லூரிக்குக் கூட நானே கொண்டு போய் விட்டு கூட்டி வருகிறேன். அவளை கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்கிறேன் ஆனால் ஏனோ இப்போதெல்லாம் என் மேல் அவள் பாசத்தைக் காட்டுவதில்லை."

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு கதையை சொல்லத் துவங்கினார்.ஒரு இளம்பெண் அழகான கூண்டில் இரண்டு சிட்டுக் குருவிகளை வளர்த்து வந்தாள். அந்தக் குருவிகள் மீது அவளுக்கு ரொம்பப் பிரியம். எப்போதும் அவற்றுக்குத் தீனி போட்டுக் கொண்டு, அவற்றோடு பேசிக் கொண்டு இருப்பாள். அவைதான் அவளது பொழுதுபோக்கு.ஒரு நாள் குருவிகளுக்கு நீர் வைப்பதற்காக கூண்டுக் கதவைத் திறந்தபோது ஒரு குருவி பறந்து விட்டது.

அந்த இளம் உடனே பதட்டமாகிவிட்டாள். குருவி வெளியே பறந்து போய்விடக் கூடாதே என்ற அதீத ஆர்வத்தில் குருவியைப் பிடிக்க ஓடினாள். இவளைப் பார்த்ததும் குருவியும் பறந்தது. அப்போது வேகமாய் கையை நீட்டி குருவியைப் பிடித்து விட்டாள் அந்தப் பெண்.ஆனால் அங்கே ஒரு சோகம் நிகழ்ந்து விட்டது. பறந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் குருவியை மிகவும் அழுத்தமாகப் பிடித்துவிட்டாள் அந்த இளம்பெண். அந்த அழுத்தத்தை குருவியால் தாங்க இயலவில்லை. உடனே இறந்துவிட்டது. இளம் பெண் அழுதாள்.
ஒரே ஒரு குருவியைக் கூட்டில் அடைத்து வைக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அதையும் திறந்து விட்டாள். அந்தக் குருவி புதிதாய் கிடைத்த சுதந்திரத்தில் அங்கும் இங்கும் வட்டமிட்டது. ஆனால் ஆச்சர்யம் பறந்து போய்விடவில்லை. அந்தப் பெண்ணிடமே வந்து அமர்ந்தது.அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது, முதல் குருவியையும் இப்படி விட்டிருந்தால் தன்னிடமே வந்திருக்கும் என்று. அன்பினால் இறுக்கியதால் குருவியை இழந்து விட்டாள்.
இளம்பெண்ணுக்கு மட்டுமல்ல வந்தவனுக்கும் தன்னுடைய குறை தெரிந்தது. அப்போது குரு அவனுக்குச் சொன்ன winமொழி:அடக்கி ஆளும் அன்பு ஆனந்தம் தராது.

Sunday, March 13, 2011

Bluetooth- பெயர்க் காரணம் !

கி. பி . 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் (Harald Bluetooth) என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், வண்ணத்திற்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. **********************************************************************************
இந்தியாவில் அயல்நாட்டு வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கணக்கீட்டின்படி இந்தியாவில் உள்ள அயல்நாட்டு வங்கிகளின் கிளைகள் அதிகரித்துள்ளது. இந்த வங்கிகளின் எண்ணிக்கை 4.4 சதவீதம் அதிகரித்து 306 வங்கிகளாக உள்ளது. 2009-10 நிதியாண்டின் முடிவில் இந்தியாவில் அதிகரித்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை 306ல் 235 வங்கிகள் அயல்நாட்டு வங்கி கிளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
************************************************************************************
iphone, ipad-களுக்கான OS : ஆப்பிள் அறிமுகம்!
iphone, ipod touch, மற்றும் ipad -களில் பயன்படும் வகையிலான IOS என்றழைக்கப்படும், ஐஆப்ரேடிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பான 4.3ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, PC World- நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த புதிய ஆபரேடிங் சிஸ்டத்தின் மூலம், iphoneகள், ipod touch மற்றும் ipad-கள் பயன்பாடு எளிதாகும் என்றும், மேலும் இந்த operating system பயன்பாடு, phone-னை WiFi router - ராக, ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை இணைக்கவும் பயன்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************
MAT Exam:

நாட்டில் உள்ள சுமார் 570 B-school களில் படிப்பில் சேர Management Aptitude Test( MAT) நடத்தபடுகிறது. இந்த எக்ஸாம் வரும் ஏப்ரல் 6
தேதிக்குள் பெயர்களை பதியு செய்து கொள்ளவேண்டும் . இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 9 ம தேதிக்குள் அனுப்பவேண்டும். இது வழக்கமான exam மட்டும்மின்றி computer மூலம் online exam - யும் நடைபெறுகிறது . Exam Date: 01 - 05- 2011. Online Exam date : 07-05-2011. மேலும் தகவலுக்கு www.aima-ind.org/.
********************************************************************************
SMS கடி


Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ண போற ?
Boy: கல்யாணம் …
Teacher: அது இல்ல நீ என்னவா ஆகா விரும்புற ?
Boy: Husband…
Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்னு எதிர் பார்க்கிறாய் ?
Boy: Wife…
Teacher: Oh No உங்க Parents’ku என்ன
பண்ண போற ?
Boy: மருமகளை தேடுவேன் …
Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார் ?
Boy: குழந்தை …
Teacher: அய்யோ !! டேய் , உன் வாழ்க்கை லட்சியம் என்ன ?
Boy: நாம் இருவர் !!! நமக்கு இருவர் !!!


**********************************************************************************
கவிதை !


மருந்திட்டுகொள்ள
மனமில்லை
உன் நகம் கிழித்த காயம்!

****

உனக்கு
மழை பிடிக்கும் என்பதால்
எனக்கு குடை பிடிக்காது !

*****

சூரியனை
நான்தான்
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ தூங்குவதற்காக !

************************************************************************************


இந்த வார தத்துவம்!


நியாமில்லாத விமர்சனமும் ஒரு பாராட்டே ஆகும். நீ ஒருவனின் பொறாமையை தூண்டிவிட்டாய் என்பதே இதை காட்டுகிறது.

***********************

சராசரி மனிதனின் விமர்சனம் உன் நோக்கத்தை திசை திருப்ப அனுமதிக்காதே . நீ கனவு கண்டால், அவன் உன்னை பைத்தியக்காரன் என்பான். நீ வெற்றி பெற்றால், நீ அதிஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலே, உன்னை பேராசைக்காரன் என்பான் . அவனை கண்டுகொள்ளாதே . அவனால் உன்னை எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது!



***********************************************************************************

Saturday, March 12, 2011

இன்று ஒரு தகவல்!

நேற்று ! நான் எனது நண்பன் செழியனை ரயில்வே ஸ்டேஷன் அருகே பார்த்தேன். அவர் ஒரு அரசாங்க ஊழியர். என்னை விட பத்து வயது பெரியவர். ஆனால் அதை எப்போதும் வெளிபடுதிக்க மாட்டார். பழக இனிமையானவர். அவருடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு கிரிக்கெட்டில் ஆரம்பித்து அரசியல், சினிமா, குடும்ப வாழ்கை வரை போனது. குடும்ப வாழ்க்கையை பற்றி அவர் கூறும்போது " இந்த காலத்துல கல்யாணமான புதுசுல கணவன் - மனைவி இரண்டு பேரும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க ; கெஞ்ச நாட்களிலே வாழ்கை Mechanical-லா ஆயிடுது.


கணவன் - மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போறவங்கள இருந்துட்ட அது ரொம்ப மோசம்!. கணவன் மனைவி மனம் விட்டு பேசறது ரொம்ப அபூர்வம். வீட்டில் பெரியவர்களுடன், குழந்தைகளுடன் பாசம் காட்ட நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கு. இதே நிலைமை போச்சுதுன்னா எதிர்காலம் ரொம்ப மோசமா இருக்கும்" என்று வருத்தப்பட்டார்.

கணவனும் மனைவியும் தினமும் கொஞ்ச நேரமாவது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யவேண்டும்.கணவனும் மனவியும் ஒருத்தரை பற்றி இன்னொருவர் புரிந்து கொள்ளவேண்டும்.
இல்வாழ்க்கை இயந்திரகதியாக மாறிப்போச்சினா நிலைமை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு ஒரு புராண கதையை சொன்னார். அதை இப்போ உங்களுக்கு சொல்கிறேன்.

வாசஸ்பதி மிஸ்ரா - ன்னு ஒருத்தர் . வட மொழி கவிஞர். பொழுது விடிஞ்சி பொழுது போன எழுதறதுதான் அவர் வேலை . வாழ்நாள் முழுசையும் இலக்கியம் எழுதுவது என்று இருந்தார்.


ஒரு சமயம் ஒரு பெரிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார். ராத்திரி நேரம் . சின்ன விளக்கு ஒன்று எரிஞ்சி கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்துல ரொம்ப நேரமா கண்ணு முழிச்சி உக்கார்ந்து கொண்டு , எதைப்பத்தியும் கவலைபடாமல் அவர் பாட்டுக்கு எழுதி கொண்டு இருந்தார்.


அந்த நேரம் பார்த்து பலமா ஒரு காத்து வீச ஆரம்பிச்சது! விளக்கு அனைஞ்சி போச்சி ! கொஞ்ச நேரம் இருட்டு !


மறுபடியும் விளக்கு எரிய ஆரம்பிச்சது - திடீர்னு ! விளக்கு ஏற்றியது யார்னு நிமிர்த்து பார்த்தார். ஒரு வயசான கிழவி இருந்தாங்க. இவரு ரொம்ப மரியாதையா அந்த அம்மாவை பார்த்து ," நல்ல நேரத்துல வந்து உதவி செய்றிங்க! யாருமா நீ ?" என்று கேட்டார்.

அந்த அம்மாக்கு ஒரே திகைப்பு , " என்ன இது ?. இப்படி கேக்க எப்படி மனசு வந்தது?. நான்தான் உங்க மனைவி பாமதி!" என்று சொன்னங்க.

" என்னது ? என் சம்சாரம் பாமத்யா ? கிழவியா ஆயிட்டியா? " என்றார் .

" ஆமாம் ! நான் தான் இப்படி ஆயிட்டேன்! நமக்கு கல்யாணம் நடந்து 50 வருஷம் மேல ஆகுது. இலக்கியம் எழுதியே உங்களுக்கு வயசு ஆயிட்டுது. உங்களுக்கு பணிவிடை செய்யறதுல எனக்கு வயசு ஆயிட்டுது.

இதை கேட்டதும் அந்த கவிஞர் கலங்க ஆரம்பிச்சுட்டார். " 50 வருஷ வாழ்க்கையை எனக்காக அர்பணிச்ச உனக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறான் தெரியுமா ? இதோ நான் எழுதிகொடிருக்கும் இந்த நூலுக்கு " பாமதி" அப்படின்னு உன்னோட பேரையே வைக்கபோறேன் !" என்று சொன்னார் . அதே மாதிரி அவர் எழுதிய நூலுக்கு பாமதினு அவர் மனைவி பெயரை வைத்தார்.

என்ன செஞ்சி என்ன பிரயோஜனம் ! 50 வருஷ வாழ்கை திரும்ப வருமா?

என்று என் நண்பர் இந்த கதையே என்னிடம் சொன்னார். இன்னொரு விஷயத்தையும் சொன்னார் , "நாம் எதையோ தேடுகிற வேகத்தில் நம்மை சுற்றியுள்ள உறவுகளை , நல்ல மனிதர்களை , நல்ல தருணங்களை நாம் தவறவிடுகிறோம். " என்றார் .

எனக்கும் இது சரி என்றே தோன்றியது!!!

Friday, March 11, 2011

Win மொழி



""எனக்கு ஆபீஸ்ல ரொம்ப பிரச்னை. எல்லா வேலையும் என் தலைலதான் விழுது. ரொம்ப கஷ்டமா இருக்கு'' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
""ஏன், மத்தவங்க யாரும் உங்க ஆபீஸ்ல இல்லையா?'' ""இருக்காங்க குரு. ஆனா அவங்க யாரும் என்னளவு வேலை செய்ய மாட்டாங்க. நானும் அவங்க கூட ரொம்ப பழகிக்க மாட்டேன்!''

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. ""இந்தக்கதையைக் கேள்'' என்று அவனுக்கு ஒரு கதையை சொல்லத்துவங்கினார் குரு.
""ஒருத்தன் கிட்ட பொதி சுமக்கிற கழுதைகள் ரெண்டு வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. ரெண்டுக்குமே ஒரே வேலைதான், சுமக்கிறது. அதில ஒண்ணு, அடுத்ததுகூட எப்பவும் போட்டி போட்டுக்கிட்டே இருக்கும். வேணும்னே வேகமாக நடக்கும், நிறைய சுமைய வச்சாக் கூட கவலையில்லாம நிக்கும். அதுனால முதலாளிக்கு இந்த கழுதையத்தான் ரொம்ப பிடிக்கும். அடுத்த கழுதையைப்பிடிக்காது. அந்தக் கழுதைக்கு நிறைய அடி விழும். இதுல இந்தக் கழுதைக்கு ரொம்ப சந்தோஷம்.


அடி வாங்குற கழுதை ஒரு நாள் இந்தக் கழுதைகிட்ட, "இதோ பார் நீயும் நானும் ஒரே வேலைதான் செய்யறோம். ஆனா நீ மட்டும் தேவைக்கதிகமா வேலை செஞ்சு என்னை திட்டு வாங்க வைக்கிற. இது நல்லதில்ல'னு சொல்லிச்சு. ஆனா இந்தக் கழுதை கேக்கல. இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் அடி வாங்குற கழுதையை துரத்தி விட்டுட்டான் முதலாளி.


""ஆகா இனி நாம மட்டும்தான் ராஜா'னு இந்தக் கழுதை சந்தோஷமாயிடுச்ச. ஆனா, எல்லா வேலையும் இந்தக் கழுதை மேல விழுந்துருச்சு. வேலை ஜாஸ்தியாக ஜாஸ்தியாக அதனால வேகமா செய்ய முடியல. அது மெதுவா செய்யறதைப் பாத்து முதலாளிக்கு கோபம். அதை அடிக்க ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல இந்தக் கழுதை லாயக்குப்படாதுனு அதை துரத்தி விட்டுட்டு புதுக் கழுதையை வாங்கிட்டு வந்துட்டான். அப்பதான் இந்தக் கழுதைக்கு தான் செஞ்ச முட்டாள்தனம் புரிஞ்சுது.''


குரு இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் வந்தவனுக்கும் தன்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி:எதையும் பகிர்ந்து செய்தால் பளு குறையும்!

Thursday, March 10, 2011

தகவல் களஞ்கியம்.


மனிதனின் மறுபக்கம்!


  • மனித உடலில் 250,000 கோடி சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க எலும்பு மஞ்சையில் புதிய சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கும்.




  • மனித உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள் .



  • நம் உடலில் 5.6 லிட்டர் ரத்தம் உள்ளது. இது ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை உடல் முழுவதும் உள்ள அணைத்து பாகங்களுக்கும் பயணிக்கிறது.



  • கணக்களின் கருவிழிகளில் 3.5 % உப்பு உள்ளது.



  • நாம் சிரிக்கும்போது முகத்தில் உள்ள 30 தசைகள் விரிவடைகிறது.



  • தும்மும்போது ஒரு வினாடிக்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல் படுவதில்லை.



  • மனித உடலில் 70 % தண்ணீர் உள்ளது.



  • 1 சதுர c.m சருமத்தில் 90 வியர்வை சுரபிகள் உள்ளன.




********************************************************



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காதல் ஜோடிகளுக்கு பிடித்த இடம் , நட்டர்டம் தேவாலயம் எதிரில் உள்ள சீன் ஆறுதான். இந்த ஆற்றுப் பாலத்தின் கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்குவதை பார்க்கலாம் . காதலர்கள் மனம் கவர்ந்தவருடன் அன்பு நிலைக்க வேண்டும் என்பதாக வேண்டிக்கொண்டு பூட்டிய பூட்டுகள் இவை .பாலத்தின் கம்பிகளில் பூட்டை தொங்க விட்டு சாவியை ஆற்றில் போட்டுவிடுவார்கள். காதலர்கள் பூட்டி வைத்த அன்பு அப்படியே நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை...





Tuesday, March 8, 2011

நேர்முகத் தேர்வை பற்றி சில தகவல்கள்!

நெட்டில் எதையோ தேடும்போது இது என்கண்ணில் தென்பட்டது. இது வேலை தேடும் Final year மாணவர்களுக்கு பயன் படும் என்று உங்கள் பார்வைக்கு தருகிறேன்...

நீங்கள் வேலைக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று இண்டர்வியூ செய்பவர் தீர்மானிக்கும் விதத்தில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள், தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக் கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடக்க உள்ள இடம், நேரம் பற்றி உறுதியாகத் தெரிந்து வைப்பதுடன், எப்படி சரியான நேரத்துக்குள் அங்கு போய்ச் சேர வேண்டும் என்பதையும் முன்னதாகத் தீர்மானம் செய்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களை (Certificates) முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவர்கள் கேட்கக்கூடியதாக உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும், நீங்கள் அவர்களை கேட்க நினைப்பவை பற்றியும் ஒரு குறிப்பை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள்தான் தகுதியானவர் என்று நினைக்கும் வகையில் பதில் அளிக்கவும். உங்கள் கெüரவமான உடை (Dress) அமைப்பும், ஒழுங்குமுறையும் (Manners) உங்களைப் பற்றி சாதகமாக அவர்களுக்குத் தெரிவிக்கும்.

பளிச்சென்று சுத்தமான ஸ்மார்ட்டாகத் தோற்றமளிக்கும் உடையை அணிந்து செல்ல வேண்டும். ஒரு தேர்ச்சி பெற்ற நேர்முகத் தேர்வாளர், உங்கள் டிரஸ், பாடி லாங்குவேஜ், முகபாவனைகள் இவற்றை வைத்தே உங்கள் மனதையும், உங்களையும் நன்கு எடை போட்டு விடுவார்.அதனால், நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட உடலசைவு, முக பாவனைகள் மூலம் எளிதில் உங்களை அவர் விரும்பக்கூடும். நீங்கள் அவரை வெற்றி கொள்ளலாம். நேர்மையாகவும், திறந்த மனதுடனும் இருங்கள். உள்ளே நுழையும்போதே சிநேக பாவத்துடனும் (Warm and Friendly) நம்பிக்கையுடனும் இருங்கள். கை குலுக்குவது, உங்களுடைய சிநேக பாவம், உற்சாகம், கவர்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நேராக, உறுதியுடன், வலிமையாக கொடுக்கப்படும் கை குலுக்கல் உங்களைப் பற்றிய பாஸிடிவ் விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கும்.

நீங்கள் இருக்கையில் உட்காரும் விதத்திலிருந்து உங்களிடம் மறைந்து கிடக்கும் விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் நேராக நிமிர்ந்து அமரவும். உங்கள் கைகள் மடிமீது அல்லது இருக்கையின் கைகள் மீது இருக்கும்படி அமரவும். அமைதியாக, வசதியாக உட்காரவும். ரிலாக்ஸ் என்றால், வீட்டில் சோபாவில் அமருவது போல கால்கள் நீட்டி அமர்வது இல்லை. உங்கள் முழங்கால் இண்டர்வியூ செய்பவரை நோக்கி இருக்கட்டும். அது, நீங்கள் அவர்கள் மீது கவனமாக இருப்பதைக் காட்டும்.

அப்படி அமருவது கஷ்டமாக இருந்தால், உங்கள் கைகள் நீங்கள் சொல்வதைத் தொடர்வது போல இருக்கலாம். குறிப்பிட்ட பாயிண்டில் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை அது காட்டும். ஆனால், மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டி அமர்ந்தால் உங்களுடைய பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை (Negative) பிரதிபலிக்கும்.

மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவருடைய மேஜையில் உங்கள் கைகள், காகிதம், பைல்கள் மூலம் அதிகப்படி இடம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வார்த்தைகளைவிடக் கண்கள் அதிகம் பேசக் கூடியவை. தேர்வாளரை உங்கள் நிலையான, உண்மையான பார்வையால் சந்தியுங்கள். இடையே கண் இமைகளை மூட மறவாதீர்கள். அதற்காக, கண்களையே சிறிது நேரம் மூடுவது தவறு. வழக்கத்துக்கு அதிகமாகக் கண் சிமிட்டுதலும், அடிக்கடி இங்கும் அங்கும் நோக்குவதும், மிகக் குறைவாக அவருடைய கண்களைச் சந்திப்பதும் உங்களுடைய பலவீனம் (Weakness) மற்றும் குறைபாடுகளைக் குறிக்கும். அவரை நோக்குவதும் கண்கள் லெவலுக்கு கீழே செல்லக்கூடாது. பொதுவாக, பிடித்தமற்ற செய்கைகள், குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

இண்டர்வியூ நேரம் முழுவதும் தைரியமாகவும், பாஸிடிவ் ஆகவும் இருங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள். குடும்ப விவரம் பற்றி சுருக்கமாகத் தெரிவியுங்கள். கடைசியாகத் தேர்வு செய்தவருக்கும், அந்த அலுவலகத்துக்கும் நன்றி கூறி விடை பெறவும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

- நன்றி தினமணி நியூஸ் பேப்பர்.

Monday, March 7, 2011

Win - மொழி

குருவிடம் வந்தான் ஒருவன். " குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும் கெட்டிக்காரனாக இருக்க விரும்புகிறேன் ஆனால்... "

" என்ன ஆனால் ?... என்னாச்சு ?"

" அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்று கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டேன். விடுமுறை நாட்களில் நடனம் படிக்கிறான் . அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர முடியவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே ?"

அவானுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் குரு.

ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய் சென்று நல்ல கருத்துகளை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை . ஒரு முறை ஒரு மலை கிராமத்துக்கு சென்றார். அங்கு ஆடு , மாடு மேயிப்பவர்கள்தான் அதிகம். அவர்களை மாலை நேரத்தில் ஒரு இடத்தில் கூட சொன்னார், அங்கு அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.அவர்களிடம் பேசுவதிற்கு நெறைய விஷயங்களை யோசித்து வைத்திருந்தார்.

ஒரே பிரசங்கத்தில் அனைவரையும் அறிவாளியாக மாற்றிவிட வேண்டும் என்பது அவர் திட்டம் ஆனால் அந்த மாலை பொழுது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது . அந்த குறிபிட்ட இடத்துக்கு சென்றபோது ஒரே ஒரு மனிதன்தான் வந்திருந்தன். பிரசங்கிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அந்த மனிதனிடம், " உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய முடியாது. அதனால் நீ போகலாம் " என்றார்.

அதற்கு அவன் ," ஐயா , நான் மாடுகளுக்கு தீனி போடலாம்னு வருவேன். அப்போது சில நாள் எல்லா மாடும் அங்க இருக்காது. ஒன்னு இரண்டு தான் இருக்கும். அதுக்காக எல்லாரும் இல்லை என்று தீனி போடாம போகமாட்டேன்." என்றான்.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதை புரிந்துகொண்ட பிரசங்கி சந்தோசமாக போதனைகளை சொல்ல ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அவனை போதனைகளால் நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது.

நல்ல போதனைகளை தந்துவிட்டோம் என்ற பெருமையுடன் அவனை பார்த்து , " எப்படி இருந்தது ? " என்று அவனை பார்த்தார் .

அதற்கு அந்த ஆடு , மாடு மேய்ப்பவன் சொன்னான் , " அய்யா , ஒரு விஷயம் . ஒரு மாடு இருந்தாலும் தீனி போடுவேன் என்று சொன்னேன் . ஆனால் கொண்டு வந்த தீனியை எல்லாம் ஒரே மாட்டுக்கு போட்டு வாயில குத்தி திணிக்க மாட்டேன்!".

குரு இந்த கதையை சொன்னதும் வந்தவனுக்கு தனது தவறு புரிந்தது.
அப்போது குரு அவனிடம் சொன்ன Win மொழி : " திணித்தால் வராது திறமை !"


Saturday, March 5, 2011

இன்பாக்ஸ்

" பிஸ்கட்" ( Biscuit )என்ற வார்த்தை பிரான்ச் மொழியில் இருந்து பிறந்ததாகும். Biscuit என்றால் இரண்டு முறை சமைக்கப்பட்டது என்று பொருள். பிஸ்கெட்கள் கெட்டுபோகாமல் நீண்ட நாட்கள் இருப்பதக்காக இரண்டு முறை வேகவைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே Biscuit என்று பெயர் வைத்தனர்.
********************************************************************************************
மனிதன் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகள்யுடன் பிறக்கிறான். ஆனால் பருவ வயதை அடையும் பொழுது 206 எலும்புகள் மட்டுமே இருக்கின்றன .

**************************************************************************************
ஆங்கில மொழியில் "Queve" என்ற வார்த்தை மட்டும் கடைசி நான்கு எழுத்துகளை எடுத்து விட்டாலும் உச்சரிப்பு மாறாமல் இருக்கும்.

**************************************************************************************
நக்கல் Student :

Teacher: ஏன் நேற்று காலேசுக்கு வரல?
Student : நேற்று என் மாமாவை திமிங்கலம் முழிங்கிடூச்சி .
Teacher: அப்படி நடத்திருக்க முடியாது. திமிங்கலம் பெரிய மிருகம் என்றாலும் அதோட கழுத்து சிறியது. மனுசனை முழுங்க முடியாது.
Student: உங்களுக்கு சந்தேகமாக இருந்தால். நான் சொர்க்கதுக்கு போகும் போது கண்டிப்பா கேட்டு சொல்றேன்.
Teacher: ( புத்திசாலியாக )ஒரு வேலை உங்க மாமா நரகத்துக்கு போயிருந்த ?
Student : ( புன்னகையுடன் ) நீங்க கேட்டு சொலுங்க .

***********************************************************************
Cute lines


"Never choose me without understanding

and Never lose me because of Misunderstanding "


********************************************************************

SMS கவிதை!


விடியும் வரை தெரிவதில்லை

கண்டது கனவு என்று... .

வாழ்க்கையும் அப்படி தான்....

முடியும் வரை தெரிவதில்லை....

வாழ்வது எப்படி என்று.


******************************************************************

Philosophy :

எதற்கும் துணிவில்லாதவன், எதையும் எதிர்பாற்க முடியாது.

Wednesday, March 2, 2011

SMS கவிதை !

என்னோடு நீ இருக்கும் போது ,
கண்களை நான் இமைக்க மாட்டேன்.
ஏன் தெரியுமா?
நான் கண்களை மூடும் அந்த நேரத்தில், என் மொபைல் லை
ஆட்டையை போட்ருவே. உன்ன பத்தி தெரியும் !

*********************************************************************************
எல்லா உயிரிடமும் அன்பாக இருங்கள்,
ஆனனால் மனிதரிடம் மட்டும் " விழிப்பாய் " இருங்கள்.
- காமராஜர்



இணையமும் இந்தியாவும் !

இந்தியாவில் internet பயன்பாடு தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரிய அளவில் நாம் இலக்குகளை எட்டவில்லை என்றாலும், இந்திய internet குறித்து நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். google search engin இயக்கத்தினை நிர்வகிக்கும் அலுவலர் ஒருவர், இன்றைய இணையப் பயன்பாடு குறித்த தகவல்களை அண்மையில் கொல்கத்தா வில் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது உலக அளவில் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா 20. 7 கோடி பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Mobile போன் வழி internet பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் இன்னும் 4 கோடியாகத்தான் உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை personal computer மற்றும் laptop வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் உயர்ந்திடும் எனவும் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இந்திய internet பயனாளர் எண்ணிக்கை 2 கோடியாகத்தான் இருந்தது. தற்போது இது 20 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்கு இன்டர்நெட் பயன்படுத்து வோரில் அதிகம் பேர் பாடல்களைத் தான் தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முதன் முதல் .com என்ற துணைப் பெயருடன் தன் இணையதள முகவரியை இந்தியாவில் பதிந்த முதல் நிறுவனம் rediff.com ஆகும். இந்தியாவில் 1,80,000 சைபர் கபே மையங்களும், 75 ஆயிரம் சமுதாய சேவை மையங்களும் மக்களுக்கு இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் தேடப்படுவதும், ரயில்வேக்குச் சொந்தமான http://www.irctc.in/என்ற தளம் தான். 84% இணையப் பயனாளர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்குச் செல்கிறார்கள்.இங்கு மொபைல் இன்டர்நெட், பெரும் பாலும் இமெயில் செக் செய்வதற்கும், தகவல்களைத் தேடுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது..com மற்றும் .net துணைப் பெயர் களுடன் இந்தியாவில் 10 லட்சத்து 37 ஆயிரம் தளங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.