தமிழகத்தில் முதல் முறை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மை ஸ்கூல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து துணைவேந்தர் சபாபதி மோகன் கூறியதாவது:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஒரு ஆண்டு எம்.பி.ஏ படிப்பு முழுவதும் நவீனமயமாக்கப்பட்ட படிப்பு ஆகும். இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ற பாடங்கள் மட்டுமே இதில் கற்றுக் கொடுக்கப்படும். விண்ணப்பிப்பது, பாடங்கள் நடத்துவது என அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும். விருப்பப்பட்ட நேரத்தில், ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதி பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் ஆன்லைன் மூலமே தீர்த்துக் கொள்ளலாம். தேர்வு எழுதுவதற்கு மட்டும் நேரில் வந்தால் போதும். இரண்டு செமஸ்டர்களாக தேர்வுகள் நடைபெறும். இந்த படிப்பை முடிக்க ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகும்.
மேலாண்மையின் அடிப்படை தத்துவம், நடப்பு வணிக நுணுக்கங்கள் இந்த இரண்டையும் கற்றுக் கொடுப்பதே இப்படிப்பின் அடிப்படை நோக்கம். முதலாளிகள் எதிர்பார்க்கும் மிகச் சிறந்த மேலாண்மை நிர்வாகம், இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் ப்ளு ஓசன் ஸ்ட்ராட்டஜி, சமூக ஊடக விற்பனை மேம்பாடு, தொழில் வணிக மாதிரி உருவாக்கம் போன்ற உலக அளவிலான பாடங்கள் இதில் கற்றுக் கொடுக்கப்படும்.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 9500091515 என்ற எண்ணிலோ,www.mybskool.com என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.இன்னும் 5 ஆண்டுகளில் ஆன்லைனில் படிப்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக இருக்கும். அதன் முதல் படிக்கட்டாக தமிழகத்தில் முதல் முறையாக ஒரு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை தொடங்கி இருக்கிறோம்.
No comments:
Post a Comment