Saturday, March 12, 2011

இன்று ஒரு தகவல்!

நேற்று ! நான் எனது நண்பன் செழியனை ரயில்வே ஸ்டேஷன் அருகே பார்த்தேன். அவர் ஒரு அரசாங்க ஊழியர். என்னை விட பத்து வயது பெரியவர். ஆனால் அதை எப்போதும் வெளிபடுதிக்க மாட்டார். பழக இனிமையானவர். அவருடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் பேச்சு கிரிக்கெட்டில் ஆரம்பித்து அரசியல், சினிமா, குடும்ப வாழ்கை வரை போனது. குடும்ப வாழ்க்கையை பற்றி அவர் கூறும்போது " இந்த காலத்துல கல்யாணமான புதுசுல கணவன் - மனைவி இரண்டு பேரும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க ; கெஞ்ச நாட்களிலே வாழ்கை Mechanical-லா ஆயிடுது.


கணவன் - மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போறவங்கள இருந்துட்ட அது ரொம்ப மோசம்!. கணவன் மனைவி மனம் விட்டு பேசறது ரொம்ப அபூர்வம். வீட்டில் பெரியவர்களுடன், குழந்தைகளுடன் பாசம் காட்ட நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கு. இதே நிலைமை போச்சுதுன்னா எதிர்காலம் ரொம்ப மோசமா இருக்கும்" என்று வருத்தப்பட்டார்.

கணவனும் மனைவியும் தினமும் கொஞ்ச நேரமாவது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யவேண்டும்.கணவனும் மனவியும் ஒருத்தரை பற்றி இன்னொருவர் புரிந்து கொள்ளவேண்டும்.
இல்வாழ்க்கை இயந்திரகதியாக மாறிப்போச்சினா நிலைமை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு ஒரு புராண கதையை சொன்னார். அதை இப்போ உங்களுக்கு சொல்கிறேன்.

வாசஸ்பதி மிஸ்ரா - ன்னு ஒருத்தர் . வட மொழி கவிஞர். பொழுது விடிஞ்சி பொழுது போன எழுதறதுதான் அவர் வேலை . வாழ்நாள் முழுசையும் இலக்கியம் எழுதுவது என்று இருந்தார்.


ஒரு சமயம் ஒரு பெரிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார். ராத்திரி நேரம் . சின்ன விளக்கு ஒன்று எரிஞ்சி கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்துல ரொம்ப நேரமா கண்ணு முழிச்சி உக்கார்ந்து கொண்டு , எதைப்பத்தியும் கவலைபடாமல் அவர் பாட்டுக்கு எழுதி கொண்டு இருந்தார்.


அந்த நேரம் பார்த்து பலமா ஒரு காத்து வீச ஆரம்பிச்சது! விளக்கு அனைஞ்சி போச்சி ! கொஞ்ச நேரம் இருட்டு !


மறுபடியும் விளக்கு எரிய ஆரம்பிச்சது - திடீர்னு ! விளக்கு ஏற்றியது யார்னு நிமிர்த்து பார்த்தார். ஒரு வயசான கிழவி இருந்தாங்க. இவரு ரொம்ப மரியாதையா அந்த அம்மாவை பார்த்து ," நல்ல நேரத்துல வந்து உதவி செய்றிங்க! யாருமா நீ ?" என்று கேட்டார்.

அந்த அம்மாக்கு ஒரே திகைப்பு , " என்ன இது ?. இப்படி கேக்க எப்படி மனசு வந்தது?. நான்தான் உங்க மனைவி பாமதி!" என்று சொன்னங்க.

" என்னது ? என் சம்சாரம் பாமத்யா ? கிழவியா ஆயிட்டியா? " என்றார் .

" ஆமாம் ! நான் தான் இப்படி ஆயிட்டேன்! நமக்கு கல்யாணம் நடந்து 50 வருஷம் மேல ஆகுது. இலக்கியம் எழுதியே உங்களுக்கு வயசு ஆயிட்டுது. உங்களுக்கு பணிவிடை செய்யறதுல எனக்கு வயசு ஆயிட்டுது.

இதை கேட்டதும் அந்த கவிஞர் கலங்க ஆரம்பிச்சுட்டார். " 50 வருஷ வாழ்க்கையை எனக்காக அர்பணிச்ச உனக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறான் தெரியுமா ? இதோ நான் எழுதிகொடிருக்கும் இந்த நூலுக்கு " பாமதி" அப்படின்னு உன்னோட பேரையே வைக்கபோறேன் !" என்று சொன்னார் . அதே மாதிரி அவர் எழுதிய நூலுக்கு பாமதினு அவர் மனைவி பெயரை வைத்தார்.

என்ன செஞ்சி என்ன பிரயோஜனம் ! 50 வருஷ வாழ்கை திரும்ப வருமா?

என்று என் நண்பர் இந்த கதையே என்னிடம் சொன்னார். இன்னொரு விஷயத்தையும் சொன்னார் , "நாம் எதையோ தேடுகிற வேகத்தில் நம்மை சுற்றியுள்ள உறவுகளை , நல்ல மனிதர்களை , நல்ல தருணங்களை நாம் தவறவிடுகிறோம். " என்றார் .

எனக்கும் இது சரி என்றே தோன்றியது!!!

2 comments:

  1. i accept this moral....we lose many thing when we searching one...

    ReplyDelete
  2. d story is realy awsm. people has to realize tat d human values should not b lost at d way of seekin money n also nt 2 miss lots of hapier moments in life. life is small live it to d fullest..........

    ReplyDelete