
பிப்ரவரி 14 என்றவுடன் நாம் உடனே “ஆஹா, அது காதலர் தினமாயிற்றே’ என்று கசிந்து உருகுவார்கள். “அது சரி... ஏப்ரல் 23 என்ன தினம்?’ என்று கேட்டுப் பாருங்கள். முழிப்பார்கள். அன்று உலக புத்தக தினம். ஆனால், இந்தத் தினத்துக்குரிய சரியான விழிப்புணர்வு நமது சமூகத்தில் இல்லை.
ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் மற்றும் மறைந்த தினமான ஏப்ரல் 23 ஐ புத்தகத் தினமாக அறிவித்து வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் உலகமெங்கும் (இங்கு தவிர) நடக்கின்றன.


ஐரோப்பாவில் அன்றைய தினம் பெற்றோர்கள் கண்டிப்பாகக் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கித் தர வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொள்கிறார்கள்.
இன்று வாசிக்கும் தளத்தில் கணினி பயன்பாடு பரந்த அளவில் நடைமுறைக்கு வந்த நிலையில் அதில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதைக் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
உதாரணமாகச் சொல்வதென்றால் தமிழில் உள்ள unicodeஐ வேர்ட் டாக்குமென்ட்டில்தான் உபயோகிக்க முடியும், இன்னமும் ஃபோட்டோ ஷாப், கோரல் டிரா, பேஜ் மேக்கர் போன்றவற்றில் தமிழ் unicode மென்பொருள் பொருத்தப்படவில்லை.
அகராதி தயாரிக்க மூன்று பல்கலைக் கழகங்கள் முனைந்திருக்கின்றன. ஆனால், வருடா வருடம் பணம் செலவாகிறதே தவிர அகராதி தயாரானபாடில்லையாம்.
படிக்கும் பழ
க்கத்துக்கு சீனாவில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் அங்கே 24 மணி நேரமும் நூலகங்கள் திறந்திருக்குமாம். “இங்கே நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குள், புத்தகங்கள் வெளி வந்து பல வருடங்கள் ஆகியிருக்கும். இவற்றையெல்லாம்விட நம் எல்லோருக்கும் கோபத்தை வரவழைக்கும் விஷயத்தையும் சொல்லட்டுமா! பல்கலைப் பேராசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம். வருடந்தோறும் புத்தகங்கள் வாங்கி update செய்து கொள்வதற்கு உதவித்தொகையும் உண்டு. ஆனால், நமது பேராசிரியர்கள் அந்தப் பணத்துக்குப் புத்தகம் வாங்காமல், ஏதாவது பதிப்பகத்தில் வெறும் பில் மட்டும் வாங்கி, அந்தத் தொகையை அபகரித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல!
க்கத்துக்கு சீனாவில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் அங்கே 24 மணி நேரமும் நூலகங்கள் திறந்திருக்குமாம். “இங்கே நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குள், புத்தகங்கள் வெளி வந்து பல வருடங்கள் ஆகியிருக்கும். இவற்றையெல்லாம்விட நம் எல்லோருக்கும் கோபத்தை வரவழைக்கும் விஷயத்தையும் சொல்லட்டுமா! பல்கலைப் பேராசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம். வருடந்தோறும் புத்தகங்கள் வாங்கி update செய்து கொள்வதற்கு உதவித்தொகையும் உண்டு. ஆனால், நமது பேராசிரியர்கள் அந்தப் பணத்துக்குப் புத்தகம் வாங்காமல், ஏதாவது பதிப்பகத்தில் வெறும் பில் மட்டும் வாங்கி, அந்தத் தொகையை அபகரித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல!அட்சய திருதியை நாளன்று நகைக்கடையில் அலைமோதும் கூட்டத்தைப் போல, உலக புத்தக நாளன்று புத்தகக் கடைகளில் கூட்டம் அலைமோதும் நாள் எந்நாளோ?
anna antha nall feb 30.
ReplyDelete