Wednesday, May 25, 2011

இன்பாக்ஸ் !



தமிழான் சிறப்பு!

தலை சிறந்த மனிதர், விஞ்ஞானி என வருட வருடம், உலகின் புகழ்
பெற்ற பிரபலங்களை தேர்ந்தெடுத்து கௌரவபடுதும் அமெரிகாவின் "டைம்" பத்திரிகை, உலகின் 10 மோசமான( ignominious ) மனிதர்களை
சமீபத்தில் பட்டியல் போட்டது ! அந்த பட்டியலில் நம்ம . ராஜா இரண்டாம் இடம். தமிழனின் பெருமையை உலக அளவில் உயர்த்திய . ராஜாக்கு நன்றிகள்.


###############################################


..டி. நுழைவுத்தேர்வு: தமிழக அளவில் விபுல்
வெங்கட்ராமன் முதலிடம்!

இந்திய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு (..டி.,) தேசிய அளவில் நடந்த நுழைவுத் தேர்வில், சென்னையைச் சேர்ந்த விபுல் வெங்கட்ராமன் முதல் இடத்தையும்,
தேசிய அளவில், 63வது இடத்தையும் பெற்றுள்ளார்.


..டி. நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், 4 லட்சத்து, 60 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. முதல், 100 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அளவில், விபுல் வெங்கட்ராமன் முதலிம் இடம் பெற்றுள்ளார்.

########################################

இனிமேல் ராமதாசும், திருமாயும் என்ன செய்ய போகிறாகள். ஒருவர் தனது மகனை M.P ஆக்கவேண்டும் என்றே குறியாக இருந்தார். தனது சமுதாயத்துக்கு என்று எதுவும் செய்யாமல் தனது மகனுக்காக மட்டும் சிந்தித்தார். இன்னொருவர் ஒரு கட்சி தலைவராக , சுயமாக கட்சின் எதிர்காலத்தை மனதில் கொண்டவராக கூட்டணி முடிவை எடுக்காமல் , திமுகயுக்கு நன்றி பாராட்டுவதில குறியாக இருந்தார். இதனால்தான் தன் சமுக மக்களாலே ஒதுக்கப்பட்டனர். இனிமேலாவது இருவரும் தனது சமுகத்தின் எதிகாலத்தை பற்றி சிந்தித்தால் நல்லது.


############################################################
SMS:


A boy’s eye is faster dan Google in searching beautiful girl in a crowd but A boy’s heart is slower dan Govt bus, while proposing a girl whom he truely LOVES.

###############################################

Positive corner:

காதலனைக் காணாமல் கலங்கினாள் அந்தப் பெண். கவலை தீர வழி கிடைக்குமென்று குருவிடம் போனாள். அவரோ அவளைப் பேச விடாமல் ஒரு பை நிறைய ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்து, “இதை உடனே அந்த மலையுச்சிக்குக் கொண்டு போ” என்றார். மனச் சுமையும் கைச்சுமையும் தாங்கி மெல்ல நடை போட்டாள்.

சலிப்பும் சிரமமுமாய் நடந்தது பயணம். மலையுச்சியை சென்றடைந்தபோது அவள் காதலன் அங்கிருந்தான். அந்தப் பழங்களை ஆசையுடன் வாங்கினான்.

நம் விருப்பத்திற்குரியவர்களுக்காக என்று தெரிந்திருந்தால் பயணம் இனித்திருக்கும் என்று கருதினாள். எல்லா முயற்சிகளும் நம் அன்பானவர்களுக்காகத்தான் என்று தெரிந்தால் எந்தப் பயணமும் சுமையில்லை.

#############

கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில் நுழைத்தால் இன்னும் உள்ளொடுங்கி அமர்ந்தது. பிறகுதான் அந்த மனிதருக்குப் புரிந்தது. விடுதலை என்று அந்தக்கிளிக்கு வார்த்தைதானே தவிர வேட்கையல்ல. தங்கள் கூண்டுகளிலேயே சுகம் காண்பவர்களுக்கு விடுதலையின் இன்பம் விளங்காது.

#######################

சிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருடைய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத் தழுவியிருக்கிறேன். திரும்பத் திரும்ப விழுந்திருக்கிறேன். ”இதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்றார்.

விழுந்தவர்கள்தானே எழ முடியும்.


############################################################



கவிதை !!


எனக்கு அசையா

சொத்துதான் இல்லை !

சையும் சொத்தாவது

இருந்துவிட்டுப் போகட்டும்


காதலியேன் !!

****

நோக்கியா

சாம்சங்

சோனி எரிக்சன்

என

மாததிருக்கு ஒரு முறை

செல்போனை மாற்றி,

மாற்றம் அவசியம் என்கிறாய் .


பயபடாமல்

எப்படி இருப்பேன் !!!



*****
நீ கேட்டால்
தடுமாறாமல் சொல்வதற்கு
மனப்பாடம்
செய்து கொண்டிருக்கிறேன்.


என் பெயரை!!!

*******

பத்திரமாக

வைத்திருக்கிறேன்

உன் முதல் பார்வையை !!

**********



Positive Picture








1 comment: